வீவோ எஸ் ஃபோல்டு ப்ரோ இந்தியாவில் ரிலீஸ்! ஒன்பிளஸ், ஓப்போ எல்லாத்தையும் ஓரங்கட்ட போகுது!

By SG Balan  |  First Published Jun 6, 2024, 5:31 PM IST

Vivo X Fold 3 Pro இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் ரூ.1,59,999 விலையில் கிடைக்கும். ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த மொபைலுக்கு வேரியண்ட் ஏதும் இல்லை.


கடந்த ஆண்டு, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு, ஒன்பிளஸ் ஓபன்,ஓபோ ஃபைண்டு என்2 ஃபிளிப் போன்ற பிரபலமான மாடல்கள் இந்திய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் சந்தையில் தாக்கம் செலுத்தின. இந்த மொபைல்கள் தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே விரைவான வரவேற்பைப் பெற்றன.

இப்போது, வீவிவோ இந்திய ஃபோல்டபிள் மொபைல் சந்தையில் களமிறங்குகிறது. AI திறன்களைக் கொண்ட Vivo X Fold 3 Pro இந்தியாவில் விவோ நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் மொபைலாக அறிமுகம் ஆகியுள்ளது. வீவோ இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த மொபைலின் வெளியீட்டுத் தேதி வெளியாகி ஆர்வத்தைத் தூண்டியது.

Tap to resize

Latest Videos

அதன்படி இன்று Vivo X Fold 3 Pro இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சீனாவில் 9,999 யுவான் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த மொபைல் ரூ.1,59,999 விலையில் கிடைக்கும். இது 256GB மெமரி மற்றும் 8GB RAM கொண்டது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த மொபைலுக்கு வேறு எந்த வேரியண்ட்டும் அறிமுகப்படுத்தவில்லை.

Vivo X Fold 3 Pro ஸ்மார்ட்போன் 8.03-இன்ச் 2K E7 AMOLED டிஸ்ப்ளேவை கொண்டது. இந்த ஸ்கிரீனில் 4,500நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன் மற்றும் HDR10 ஆகிய அம்சங்களும் உண்டு. இது 6.53-இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. LTPO பேனலும் உள்ளது. அல்ட்ரா-தின் கிளாஸ் (UTG) ஸ்கீரின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

undefined

நத்திங் ஃபோன் (3)... சி.எம்.எஃப். ஃபோன் (1)... சஸ்பென்ஸ் வைத்து டீஸர் வெளியிட்ட நத்திங்!

இந்த மொபைல் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கூடுதலாக, இதில் விவோவின் தனிப்பயன் V3 இமேஜிங் சிப்பையும் கொண்டுள்ளது.

Vivo X Fold 3 ஸ்மார்ட்போனில் 14.98 கிராம் எடையுள்ள ஒரு கார்பன் ஃபைபர் கீல் அறிமுகமாகிறது. இது முந்தைய மாடலைவிட 37 சதவீதம் லேசானதாக இருக்குமாம். TUV ரைன்லேண்ட் இதற்கு 500,000 முறை ஃபோல்டு செய்வதைத் தாங்கும் என சான்று கொடுத்துள்ளது.

Vivo X Fold 3 Pro மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது: f/1.68 லென்ஸ் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் பிரதான கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் ஆகியவை அதில் அடங்கும். உள் மற்றும் வெளிப்புறத் திரைகள் இரண்டும் f/2.4 துளைகளுடன் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராக்களைக் கொண்டுள்ளன.

5G, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, NFC, GPS, USB Type-C போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்களும் சிறப்பாக உள்ளன. முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக 3D அல்ட்ராசோனிக் இரட்டை கைரேகை சென்சார், ஃபேஸ் ஐடி ஆகியவை உள்ளன. இந்த மொபைல் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IPX8 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5,700mAh அளவுள்ள பெரிய பேட்டரியும் இருக்கிறது.

இன்ஸ்டாவில் நாசா கொண்டு வந்த 3D ஃபில்டர்! எப்படி யூஸ் பண்ணுறதுன்னு தெரிஞ்சுக்கோங்க!

click me!