இனி, வருடத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும்.. Vi நிறுவனத்தின் அசத்தல் ரீசார்ஜ் திட்டங்கள்..

By Ramya s  |  First Published Jun 17, 2023, 7:24 PM IST

ஓர் ஆண்டுக்கு செல்லுபடியாகும் Vi நிறுவனத்தின் 365 ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து தற்பொது பார்க்கலாம்.


வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தொலைத் தொடர்பு  நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் Vi நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க பல்வேறு சிறப்பு சலுகைகளுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ஓர் ஆண்டுக்கு செல்லுபடியாகும் 365 ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து தற்பொது பார்க்கலாம்.

ரூ 3099 திட்டம் :

Tap to resize

Latest Videos

இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி மொபைல் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100 எஸ்.எம்.எஸ் இலவசம், Vi Hero unlimited benefits போன்ற வசதிகள் கிடைக்கும். மேலும் 50 ஜிபி கூடுதல் டேட்டா, ஒரு வருட டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தா திட்டம், Vi Movies & Tv Vip access என பல சலுகைகள் கிடைக்கும்.

Realme 11 Pro+ 5G: அட்டகாசம்! அமர்க்களம்! விடா முயற்சியோடு வந்த Realme 11 Pro+ - எப்படி இருக்கு?

ரூ.2999 திட்டம் :

இந்த வருட திட்டத்தில் மொத்தமாக 850 ஜிபி அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் போன்ற வசதிகள் கிடைக்கும். மேலும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் வசதியுடன், Vi Movies classic access, Binge All night போன்ற சிறப்பு வசதிகளும் கிடைக்கும்.

ரூ.2899 திட்டம்

இந்த திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் Vi hero unlimited, Binge all night, weekend data rollover, data delights போன்ற  சலுகைகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் வசதி கூடுதலாக 50 ஜிபி டேட்டா, Vi movies & tv vip access போன்ற சலுகைகள் கிடைக்கும்.

ரூ.1799 திட்டம் :

குறைவான டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும். இதில் மொத்தம் 24 ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 3600 எஸ்.எம்.எஸ்  , Vi movies & tv basic accesss போன்ற சலுகைகள் கிடைக்கும்.

 

WhatsApp-ன் 5 சீக்ரெட் அம்சங்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரிஞ்சா அசந்துடுவீங்க

click me!