ஆப்பிளுக்கு இப்படி ஒரு சென்டிமெண்ட் இருக்கா? ஐபோன் 16 ரிலீஸ் தேதி தள்ளிப் போகுமா?

By SG Balan  |  First Published Aug 15, 2024, 9:00 PM IST

இந்த ஆண்டும் செப்டம்பர் மாதமே ஆப்பிள் ஐபோன் 16 வெளியீட்டு நிகழ்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 27ஆம் தேதி அதைபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கணிப்புகள் கூறுகின்றன.


ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் மெகா நிகழ்வின் நிகழ்வின் தேதியை இன்னும் வெளியிடவில்லை. ஆனால், செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்போது தான் வெளியீட்டுத் தேதி பற்றிய சஸ்பென்ஸ் விலகும்.

கடந்த இரண்டு ஐபோன் சீரிஸ் வெளியீடுகளைப் பார்க்கும்போது, வெளியீட்டுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. iPhone 15 சீரிஸ் வெளியீடு செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 29 அன்று அதற்கான அறிவிப்பு வந்தது. அதே நேரத்தில் iPhone 14 சீரிஸ் வெளியீட்டு நிகழ்வு ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 7ஆது தேதி நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

undefined

இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் செப்டம்பர் மாதமே ஆப்பிள் ஐபோன் 16 வெளியீட்டு நிகழ்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 27ஆம் தேதி அதைபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

இன்டர்வியூவில் பொய் பேசுபவர்களை ஒரே கேள்வியில் கண்டுபிடிக்கலாம்! இதுதான் எலான் மஸ்க் ஐடியா!

ஆப்பிள் பொதுவாக செப்டம்பர் இரண்டாவது செவ்வாய் அன்று புதிய ஐபோன் மாடல்களை வெளியிடுகிறது. ஆனால், எப்போதும் இதைப் பின்பற்றுவதில்லை. ஐபோன் 14 சீரிஸ் 2022இல் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், ஆப்பிள் நிறுவனம் எப்போதாவது வெளியீட்டு நிகழ்வை வேறு மாதத்திலும் நடத்தி இருக்கிறது.

ஆப்பிள் பொதுவாக செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் ஐபோன் வெளியீட்டு நிகழ்வுகளை நடத்துகிறது. அதே நேரத்தில் வரும் செப்டம்பர் முதல் திங்கட்கிழமை தொழிலாளர் தினத்தில் வெளியிடுவது பற்றியும் பரிசீலிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு முறையும் வெளியீடு நிகழ்வுக்கு முன்னதாக ஒரு முழு வேலை நாள் இருப்பதையும் உறுதிசெய்கிறது. அதனால்தான் பெரும்பாலும் செவ்வாய்க்கிழமையைத் தேர்ந்தெடுக்கிறது.

இந்த முறையின் அடிப்படையில், ஐபோன் 16 சீரிஸ் செப்டம்பர் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, செப்டம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டால், முன்பதிவு ஆர்டர்கள் செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கும். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் புதிய ஐபோன்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க ஆரம்பிக்கும். இதெல்லாம் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்போதுதான் உறுதியாகும்.

குரோம் பிரவுசரில் சூப்பர் பவர் வேணுமா? இந்த AI எக்ஸ்டென்ஷன் இன்ஸ்டால் பண்ணிக்கோங்க!

click me!