பிக்சல் 6a மாடலின் ரெண்டர்கள் மற்றும் புகைப்படங்கள் சேர்த்து, ஸ்மார்ட்போனின் பல விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
கூகுள் நிறுவனம் மிக விரைவில் தனது பிக்சல் 6a ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதை ஒட்டி புது பிக்சல் ஸ்மார்ட்போன் விவரங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகிவிட்டன. இது தவிர பிக்சல் 6a மாடலின் ரெண்டர்கள் மற்றும் புகைப்படங்கள் சேர்த்து, ஸ்மார்ட்போனின் பல விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில் கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபர டிப்ஸ்டர் முகுல் ஷர்மா இதுபற்றிய தகவல்களை தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.
undefined
இந்திய டெஸ்டிங்:
அதன்படி, இந்தியாவில் புதிய கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் சோதனை துவங்கி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த ஸ்மார்ட்போன் பிக்சல் 6a மாடல் தான் என்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதோடு ஒவ்வொரு மே மாதத்திலும் கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் a சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
இதன் காரணமாக, கூகுள் நிறுவனம் தற்போது இந்தியாவில் சோதனை செய்து வரும் ஸ்மார்ட்போன் பிக்சல் 6a மாடலாக இருக்கலாம் என முகுல் ஷர்மா தெரிவித்து இருக்கிறார். முன்னதாக கூகுள் நிறுவனம் நேரடியாக இந்தியாவில் வெளியிட்ட கடைசி ஸ்மார்ட்போன் மாடலாக பிக்சல் 4a இருக்கிறது.
நல்ல வரவேற்பு:
கூகுள் தரத்தில் அசத்தலான வெளியான பிக்சல் 4a மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. அமோக வரவேற்பு காரணமாக இதன் விற்பனை நடைபெற்ற அனைத்து முன்னணி வலைதளங்களிலும் பிக்சல் 4a மாடல் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்து கொண்டே இருந்தது.
புதிய கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் வெளியிடுவது பற்றி கூகுள் தரப்பில் இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுதவிர கூகுள் நிறுவனத்தின் 2022 I/O நிகழ்வு மே 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்வில் கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் 6a ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த நிகழ்விலேயே புதிய பிக்சல் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.