உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போன்... இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

By Kevin Kaarki  |  First Published May 8, 2022, 5:08 PM IST

புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கொண்டிருக்கும் என மோட்டோரோலா தெரிவித்து உள்ளது. 


மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஏற்கனவே வெளியாகி இருந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில், புதிய மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் மே 12 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என மோட்டோரோலா இந்தியா அறிவித்து இருக்கிறது. 

மேலும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கொண்டிருக்கும் என மோட்டோரோலா தெரிவித்து உள்ளது. மோட்டோரோலா மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கும். 

Tap to resize

Latest Videos

undefined

மோட்டோ எட்ஜ் 30 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

- 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED 144Hz டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778G+ 6nm பிராசஸர்
- அட்ரினோ 642L GPU
- 8GB ரேம்
- 128GB / 256GB மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் MyUX
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.88, OIS
- 50MP 118° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2 (2.5cm மேக்ரோ ஆப்ஷன்)
- 2MP டெப்த் சென்சார், f/2.4
- 32MP செல்பி கேமரா, f/2.25
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6E 802.11ax (2.4GHz/5GHz) MIMO, ப்ளூடூத் 5.2, GPS
- யு.எஸ்.பி. டைப் சி
- 4020mAh பேட்டரி
- 33W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்

விலை விவரங்கள்:

புதிய மோட்டோரோலா மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அதன் படி மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். 

click me!