விவோ Y75 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இதன் 4ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் புதிய Y75 4ஜி ஸ்மார்ட்போன் மே 22 ஆம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அறிமுக தேதி மட்டும் இன்றி புதிய விவோ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்களும் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதன்படி விவோ Y75 4ஜி மாடலில் 6.44 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் ஏற்கனவே விவோ Y75 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இதில் 6.58 இன்ச் 1080x2408 பிக்சல் FHD+ IPS LCD டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 8GB ரேம் மற்றும் 128GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP போக்கெ கேமரா, 16MP செல்பி கேமரா மற்றும் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.
விவோ Y75 4ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
- 6.44 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்
- மீடியாடெக் ஹீலியோ G96 பிராசஸர்
- 8GB ரேம்
- 128GB மெமரி
- 50MP பிரைமரி கேமரா
- 8MP இரண்டாவது கேமரா
- 2MP மூன்றாவது கேமரா
- 44MP செல்பி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 4020mAh பேட்டரி
- 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி
ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட விவோ Y75 5ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ. 20 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது. அதன்படி புதிய விவோ Y75 4ஜி வெர்ஷன் விலை அதை விட சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. எனினும், இதுபற்றிய விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படலாம்.
இந்தியாவில் விவோ Y75 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது இதன் 4ஜி மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.