Latest Videos

iOS 18 ல் கேமிங் மோட் அறிமுகம்! ஐபோன்களில் அட்டகாசமான கேமிங் அனுபவத்துக்கு உத்தரவாதம்!

By SG BalanFirst Published Jun 11, 2024, 5:35 PM IST
Highlights

Game Mode in iOS 18 by Apple: கேமிங் மோட் ஐபோன்களின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று. இதை ஐபோன் பயனர்கள் தாங்களே இயக்க வேண்டிய அவசியம் இல்லை; விரும்பும் கேமை விளையாடும்போது ஐபோன் தானாகவே அதற்கேற்ப கேம் மோடுக்கு மாறிவிடும்.

ஆப்பிள் நிறுவனம் டெவலப்பர் மாநாட்டில் அறிவித்த iOS 18 இல் ஆச்சரியம் அளிக்கும் புதிய அம்சத்தைக் கொண்டுவந்துள்ளது. ஆப்பிள் ஐபோன்களில் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் கேமிங் மோட் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் புதுமையான முறையில் தீவிரமான கேம்களை விளையாடும்போது ஐபோனின் செயல்திறனை மேம்படுத்துவதை உறுதி செய்கிறது. அதிவேகமான விளையாட்டு அனுபவத்தையும் வழங்குகிறது. iOS 18 இல் உள்ள கேம் மோட் அதிக தீவிரம் கொண்ட கேமிங்கின் போது தானாகவே செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விளையாடும்போது ஐபோன் சிறந்த முறையில் செயல்படுவதை உறுதி செய்கிறது.

கேமிங் மோட் ஐபோன்களின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று. இதை ஐபோன் பயனர்கள் தாங்களே இயக்க வேண்டிய அவசியம் இல்லை; விரும்பும் கேமை விளையாடும்போது ஐபோன் தானாகவே அதற்கேற்ப கேம் மோடுக்கு மாறிவிடும்.

ஒரு செகண்ட்ல 1.5 லட்சம் போச்சா! கேரளாவில் டூர் போன இடத்தில் நடந்த சம்பவம் வைரல்!

கேண்டி க்ரஷ் போன்ற சாதாரண கேம்கள் கேம் மோட் மூலம் குறிப்பிடத்தக்க வகையில் பயன் அடைய வாய்ப்பில்லை. ஆனால், இப்போது ஹெவி கேம்ஸ் எனப்படும் உயர் செயல்திறன் தேவைப்படும் கேம்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் ஸ்னைப்பர் எலைட் 4 போன்ற ஹெவி கேம்கள் ஐபோன்களில் மிகவும் சுமூகமாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கேமிங் பிரியர்களுக்கு ஆப்பிள் கொடுக்கும் சர்ப்ரைஸ் பரிசாக அமைந்துள்ளது.

ஆப்பிள் அதன் மேக் சாதனங்களில் கேமிங்கை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. ஐபோனுக்கான கேம் மேட் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது அதன் ஆப்பிள் கொண்டிருக்கும் அக்கறையின் வெளிப்பாடுதான். ஐபோன் மேக்ஸில் ஏற்கனவே உள்ள இந்த அம்சம், iOS 18 அப்டேட் மூலம் மற்ற ஐபோன் பயனர்களுக்கும் கிடைக்கவுள்ளது.

iOS 18 இயங்குதளத்தில் உள்ள கேம் மோட் ஐபோனில் மொபைல் கேமிங்கிற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. இது கேம் பிரியர்களுக்கு மிகவும் அற்புதமான அனுபவத்தை அளிக்கும் என்று கருதப்படுகிறது.

சம்பளத்தில் 50% பென்ஷனுக்கு கேரண்டி! புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றும் என்.டி.ஏ. அரசு!

click me!