10% ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்னாப்சாட்! விளம்பர மார்க்கெட் சவாலை சமாளிக்க முடியலயாம்!

By SG Balan  |  First Published Feb 6, 2024, 8:03 AM IST

ஸ்னாப்சாட் நிறுவனம் அதன் மொத்த உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதம் பேர் அல்லது சுமார் 500 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளது.


டிஜிட்டல் விளம்பரச் சந்தையின் சவாலைச் சமாளிக்கும் முயற்சியாக, ஸ்னாப்சாட் நிறுவனம் அதன் மொத்த உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 500 ஊழியர்கள் வேலை இழக்க உள்ளனர்.

விளம்பர சந்தையில் சரிவு மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு அப்பால் விரிவடைவதில் உள்ள சிரமங்கள் காரணமாக இந்தப் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று கூறுகின்றனர்.

Latest Videos

undefined

பணிநீக்கங்களால் பாதிக்கப்படும பணியாளர்கள் எந்தக் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை ஸ்னாப்சாட் நிறுவனம் கூறவில்லை. ஆனால் இந்த வேலைநீக்கம் எதிர்கால வளர்ச்சி மற்றும் முதலீடுகளை அதிகரிக்கும் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

பூமியைப் போல இன்னொரு கிரகம் இருக்கு! வெறும் 137 ஒளியாண்டு தொலைவில் உள்ள 'சூப்பர் எர்த்'!

ஸ்னாப்சாட் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வது முதல் முறை அல்ல. 2022 இல், இந்நிறுவனம் அதன் ஊழியர்களில் 20 சதவீதம் பேரை திடீரென வீட்டுக்கு அனுப்பியது. 2023ஆம் ஆண்டிலும் குறைந்தது 3 சதவீதம் ஊழியர்களை வேலைநீக்கம் செய்துள்ளது.

2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஸ்பாப்சாட்டின் தாய் நிறுவனமான ஸ்னாப்பின் வருவாய் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்தது. ஆனால் அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு காலாண்டுகளில் தொடர்ச்சியாக வருவாய் சரிவு ஏற்பட்டுள்ளது. பலதரப்பட்ட சேவைகளை வழங்கினாலும், ஸ்னாப்சாட் ஏஆர் கண்ணாடிகள், செல்ஃபி ட்ரோன், ஸ்பாட்லைட் மற்றும் ஸ்னாப்சாட் சந்தா சேவை உட்பட பலவற்றில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ஸ்பாப் நிறுவனத்தின் சி.இ.ஓ இவான் ஸ்பீகல், 2024ஆம் ஆண்டிற்கான இலக்குகளை நிர்ணயித்துள்ளார். தினசரி பயனர்களை 17 சதவிகிதம் அதிகரிக்கவும், விளம்பர வருவாயை 20 சதவிகிதம் அதிகரிக்கவும், தற்போதைய ஸ்னாப்சாட் பிளஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கையை (70 லட்சம்) இரட்டிப்பாக்கவும் இலக்கு வைத்துள்ளார்.

AI தொழில்நுட்பம் வருமான வரி தாக்கலை சரிபார்க்க உதவுகிறது: மத்திய நேரடி வரி வாரிய தலைவர் தகவல்

click me!