’சிவனுக்கு’ வழிகாட்டிய சண்முக ’சுப்பிரமணியன்’... மோடி கண்ணீரைத்தான் துடைத்தார்... இந்த மதுரை தமிழன் கண்டுபிடித்தே கொடுத்தார்..!

எந்த விக்ரம் லேண்டருக்காக இஸ்ரோ சிவன் அழுது கண்ணீர் வடித்தாரோ, அதனை கண்டு பிடித்துக் கொடுத்துள்ளார் மதுரையை சேர்ந்த சண்முக சுப்ரமணியன். கவனிக்க இங்கே ’சிவனுக்கு’ உதவியுள்ளார் ’சுப்ரமணியன்’  

Shanmuga Subramanian is the guide of the  isro Shivan

விக்ரம் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்ட போது இஸ்ரோ சிவன் கண்ணீரில் மல்க, அவரது கண்ணீரை துடைத்து மோடி ஆறுதல் சொன்ன காட்சியை பார்த்து  இந்தியாவே நெகிழ்ந்தது. சிவன் வடித்த கண்ணீரில் பல இதயங்கள் கரைந்து போயின. எந்த விக்ரம் லேண்டருக்காக இஸ்ரோ சிவன் அழுது கண்ணீர் வடித்தாரோ, அதனை கண்டு பிடித்துக் கொடுத்துள்ளார் மதுரையை சேர்ந்த சண்முக சுப்ரமணியன். கவனிக்க இங்கே ’சிவனுக்கு’ உதவியுள்ளார் ’சுப்ரமணியன்’  

Shanmuga Subramanian is the guide of the  isro Shivan

Latest Videos

நிலவில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்தை கண்டுபிடித்த தமிழரான சண்முக சுப்பிரமணியன், தனது கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சொந்த மண்ணாக கொண்ட பச்சைத் தமிழரான சண்முக சுப்பிரமணியனுக்கு தற்போது வயது 33. மெக்கானிக்கல் பொறியாளரான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிலவுக்கு இஸ்ரோ  அனுப்பிய சந்திரயான்-2, கடைசி நேரத்தில் தோல்வியடைந்த நிலையில், விக்ரம் லேண்டர் குறித்து எந்தவித தகவலும் தெரியாத நிலையில், நாசாவும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கைவிரித்து. இதனால், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க தன்னால் முடிந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், இஸ்ரோவுடன் தொடர்புகொண்டு, அவர்கள் அனுப்பிய புகைப்படங்கள் மூலம் விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை துல்லியமாக கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

விக்ரம் லேண்டர் தொடர்பாக நாசா ஏற்கனவே செப்டம்பர் 17, அக்டோபர் 14, 15 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் படம் பிடித்தவற்றை ஆராய்ந்த சண்முக சுப்பிரமணியன், அதன் சிதைந்த பாகங்களின் இருப்பிடம் குறித்த தகவல் களை நாசாவுக்கு அனுப்பி வைத்தார். இதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட நாசா விஞ்ஞானிகள் சண்முக சுப்பிரமணியன் தெரிவித்த தகவல்களின் படி விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்கள் இருக்கும் இடங்களை கண்டுபிடித்தது.

இவர்தான், விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டறிந்தார். அதை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா  என்று உறுதி செய்துள்ளது. இதுகுறித்து தனது சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ள சுப்பிரமணியன்,  ‘என்னைப் பற்றி யாருக்கும் தெரியாது’ தான் ஒரு பதிவர், கோடர் புகைப்படக் கலைஞர் மற்றும் ஒரு நேர்ட் என்று விவரித்துள்ளதுடன்,  தனக்கு  பயணம், விண்வெளி, தத்துவம், அரசியல் போன்ற பலவிதமான ஆர்வங்கள் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

இதைத்தொடர்ந்தே இன்று காலை (டிசம்பர் 3 காலை) சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பயோவில், நான் விக்ரம் லேண்டரைக் கண்டேன் என்று பெருமிதமாக கூறி உள்ளார். நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் தொடர்ந்து ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிந்தார். சுப்பிரமணியன் ஆய்வு செய்து தெரிவித்துள்ள புகைப்படங்களில்,  விக்ரம் லேண்டரால் ஏற்படுத்தப்பட்ட தாக்கம் நீலம் மற்றும் பச்சை நிறப்புள்ளிகளாகக் காணப்படுகிறது. அவற்றில் பச்சைப் புள்ளிகள் விக்ரம் லேண்டரால் ஏற்படுத்தப்பட்ட குப்பைகளாகவும், நீல நிறப் புள்ளிகள் நிலவின் நிலப்பரப்பில் ஏற்பட்ட பாதிப்பாகவும் இருக்காலம் எனவும் கூறப்படுகிறது.

விக்ரம் லேண்டர் தொடர்பாக தான் கண்டுபிடித்ததை நாசாவுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். இதையடுத்து சுப்பிரமணியனின் ஆய்வை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்தனர். விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகத்தை கண்டறிய உதவிய சண்முக சுப்பிரமணியத்துக்கு நாசா உறுதி செய்து, சுப்பிரமணியனை கவுரவித்து உள்ளது.

விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்தை கண்டுபிடிக்க இஸ்ரோ, நாசா என உலக நாடுகளின் ஆய்வாளர்கள் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில்,  சுமார் 33 வயது  மதுரையைச் சேர்ந்த தமிழரான பொறியாளார் சண்முக சுப்பிரமணியன் கண்டுபிடித்துள்ளது  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கீழடி தொல்லியல் ஆய்வு மூலம் தமிழன் யார் அவரது திறமை என்ன என்பதை உலக நாடுகளே வியந்துள்ள நிலையில், தமிழன் என்றுமே சோடை போவது கிடையாது என்பதை சுப்பிரமணியனின் கண்டுபிடிப்பு உலக நாடுகளுக்கு சவால் விடுத்துள்ளது.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image