உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு வளர்ச்சி குறைந்துள்ளது எனவும் இந்த ஆண்டு சராசரியைவிட மிக அதிகமான வளர்ச்சி இருக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் 2024ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள நொய்டா தொழிற்சாலையில் லேப்டாப்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் சாம்சங் நிறுவனத்தின் தலைவர் டி.எம். ரோஹ், உற்பத்தி அடிப்படையில் இந்தியா தங்களுக்கு ஒரு முக்கியமான நாடு என்று கூறியிருக்கிறார். இந்தியாவில் லேப்டாப் தயாரிப்பிற்கான தயாரிப்பு நடந்து வருவதாகவும் ரோஹ் உறுதிப்படுத்தியுள்ளார்.
“நாங்கள் இந்த ஆண்டு நொய்டா தொழிற்சாலையில் லேப்டாப் தயாரிப்பைத் தொடங்குவோம். அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. நொய்டா சாம்சங்கின் மிக முக்கியமான உற்பத்தித் தளமாகும். இது சாம்சங்கின் இரண்டாவது பெரிய தொழிற்சாலை. உலகளாவிய தேவைக்கு ஏற்ப அதை மேம்படுத்த ஆலையில் சில மாற்றங்கள் செய்ய இருக்கிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
இனி Paytm யூஸ் பண்ண முடியாதா? வங்கி சேவையை நிறுத்த ஆர்பிஐ போட்ட அதிரடி உத்தரவு!
“நாங்கள் இந்திய அரசாங்கம் மற்றும் இந்தியாவில் உள்ள சாம்சங் குழுவுடன் மிகவும் நெருக்கமாக ஒத்துழைக்கிறோம். வெளிப்படையான ஒத்துழைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அத்தகைய நல்ல ஒத்துழைப்பைப் பேணுவதன் மூலம், ஒரு சிறந்த சூழ்நிலையை உருவாக்க முடியும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு வளர்ச்சி குறைந்துள்ளது எனவும் இந்த ஆண்டு சராசரியைவிட மிக அதிகமான வளர்ச்சி இருக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
சாம்சங் ‘மேட்-இன்-இந்தியா’ ஸ்மார்ட்போன்
சாம்சங் சமீபத்தில் தனது முதல் 'மேட் இன் இந்தியா' கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் நவீன செயற்கை நுண்ணறிவு திறன் வசதிகளைக் கொண்டது. இதனை சாம்சங் நிறுவனம் தனது நொய்டா தொழிற்சாலையில் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
சீனாவுக்கு உளவு பார்ப்பதாகப் பிடிபட்ட புறா 8 மாதங்களுக்குப் பின் விடுதலை!