சாம்சங் நிறுவனம் அண்மையில் கேலக்ஸி எஸ் 23, எஸ் 23 பிளஸ் ஆகிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்களில் பெரிதும் பேசப்பட்ட விஷயம் அதிலுள்ள கேமரா தான். இந்த 'எபிக்' கேமராவில் அனைவரையும் கவரும் வகையில், கிரியேட்டிவாக படம்பிடிப்பதற்கான பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக நைட் கிராஃபி, ஆஸ்ட்ரோஃபோட்டோ மோட் போன்ற அம்சங்கள் ஒரு புரொபெஷனல் போட்டோகிராபிக்கு போட்டிபோடும் விதமாக உள்ளன.
Galaxy S23, Galaxy S23+ இந்த இரண்டு போன்களும் குறைந்த வெளிச்சத்தில் கூட நல்ல தெளிவான படம் பிடிக்கும் திறனைக் கொண்டுள்ளன. ஃபோகஸ் செய்வதும், ஜூம் செய்வதும் துல்லியமாக உள்ளன. அதற்கு ஏற்றாற் போல் 50 மெகா பிக்சல் கொண்ட டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் வசதி உள்ளது. முன்பக்கத்தில் 12 மெகா பிக்சல் கொண்ட டூயல் PD AF செல்ஃபி கேமரா உள்ளது.
இரவு நேரத்தில் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த ஃபோன் தான் சிறந்த தேர்வாக இருக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் போது, பறவைகள் விலங்குகளை படம்பிடிக்கும் போது, அல்லது நண்பர்களுடன் இரவு ஜாலியாக வெளியே செல்லும்போது, நைட்கிராஃபி மோட் மூலம் போட்டோ எடுக்கலாம். இந்த முறையில் எடுக்கப்பட்ட படங்கள் மங்கலாக இல்லாமல் மிகுந்த தெளிவுடன் வெளிவரும்.
நிலாவை போட்டோ எடுக்கலாமா?
நீங்கள் எப்போதாவது உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து சந்திரனைப் படம் எடுக்க முயற்சி செய்ததுண்டா? அப்படி முயற்சி செய்து சரியாக போட்டோ வராமல் ஏமாற்றமடைந்தீர்களா? இனி அப்படி ஏமாறத்தேவையில்லை. Galaxy S23, Galaxy S23+ ஸ்மார்ட்போன் மூலம் நிலாவையும் போட்டோ எடுக்கலாம். இதற்காக ஆஸ்ட்ரோஃபோட்டோ என்ற நுட்பமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
OnePlus 11 5G எப்படி இருக்கு? நீடித்து உழைக்குமா? இதோ முழு விவரங்கள்!
ஆஸ்ட்ரோஃபோட்டோ மோட் வசதி மூலம் சந்திரனை எல்லா கோணங்களிலும் நீங்கள் படம்பிடிக்கலாம். நண்பர்களுடன் அந்த படங்களை பகிர்ந்து அசத்தலாம். AstroHyperlapse மூலம், நகரும் நட்சத்திரங்களின் வீடியோவையும் நீங்கள் எடுக்கலாம். உங்கள் செல்ஃபிக்களும், 12MP முன்பக்கக் கேமரா மற்றும் Super HDR உடன் மேம்படுத்தலாம்.