
பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் கொடிகட்டிப் பறக்கும் சாம்சங், தனது கேலக்ஸி S25+ (Samsung Galaxy S25+) மாடலுக்கு நம்பமுடியாத விலைக் குறைப்பை அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற்று வரும் சிறப்பு விற்பனையில், இந்த போன் வாங்குபவர்களுக்கு சுமார் 28,000 ரூபாய் வரை மிச்சப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான இந்த ஃப்ளாக்ஷிப் போன், தற்போது நடுத்தர விலைக்கே கிடைப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 5 வரை 'கேலக்ஸி டேஸ்' (Galaxy Days) விற்பனை நடைபெறுகிறது. இந்த குறுகிய கால விற்பனையில்தான் சாம்சங் தனது பல்வேறு தயாரிப்புகளுக்கு தள்ளுபடியை வழங்கியுள்ளது. குறிப்பாக, ரூ.99,999 என்ற விலையில் விற்கப்பட்ட 12GB ரேம் கொண்ட கேலக்ஸி S25+ மாடல், தற்போது ரூ.74,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது நேரடியாக ரூ.25,000 விலை குறைக்கப்பட்டுள்ளது.
விலைக் குறைப்புடன் சேர்த்து, வங்கி சலுகைகளும் வழங்கப்படுகின்றன. நீங்கள் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் (Flipkart Axis Bank) அல்லது எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், கூடுதலாக ரூ.3,750 வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இதன் மூலம், மொத்த சேமிப்புத் தொகை சுமார் ரூ.28,750 ஆக உயர்கிறது. இதுமட்டுமின்றி, பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.59,550 வரை கூடுதல் தள்ளுபடியும் உண்டு.
இந்த போன் 6.7 இன்ச் டைனமிக் அமோலேட் டிஸ்பிளே மற்றும் அதிவேக செயல்திறன் கொண்டது. சக்திவாய்ந்த கேமரா செட்டப், நீண்ட நேரம் உழைக்கும் பேட்டரி மற்றும் சாம்சங் கேலக்ஸி AI அம்சங்கள் இதில் உள்ளன. கேமிங், போட்டோகிராபி மற்றும் மல்டி டாஸ்கிங் என அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு முழுமையான பேக்கேஜ் இதுவாகும்.
ரூ.70,000 பட்ஜெட்டில் ஒரு சிறந்த ஆண்ட்ராய்டு போனைத் தேடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பு. புதிய S26 சீரிஸ் வரவுள்ள நிலையில், S25+ மாடலை இவ்வளவு குறைந்த விலையில் வாங்குவது புத்திசாலித்தனமான முடிவாகும். சலுகை பிப்ரவரி 5 வரை மட்டுமே இருக்கும் என்பதால், விருப்பமுள்ளவர்கள் உடனே பிளிப்கார்ட் தளத்தை அணுகலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.