கேமிங் உலகை மிரட்டும் கூகுள் ஏஐ: பங்குச்சந்தையில் திடீர் சரிவு - பின்னணி என்ன?

Published : Feb 01, 2026, 09:30 AM IST
Google Genie

சுருக்கம்

Google Genie 3 வருகையால் கேமிங் பங்குகள் சரிவை சந்தித்தன. இது தற்காலிகமானது என்றும் விரைவில் மீளும் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர்.திடீர் சரிவு - பின்னணி என்ன?

சமீபத்தில் கூகுள் நிறுவனம் தனது அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான 'ஜீனி 3' (Genie 3) ஐ அறிமுகப்படுத்தியது. அமெரிக்காவில் உள்ள பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ள இந்த வசதி, கேமிங் உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, உலகின் முன்னணி வீடியோ கேம் நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் மளமளவென சரிந்தன. முதலீட்டாளர்கள் மத்தியில் திடீரென ஏற்பட்ட இந்த பதற்றத்திற்கு என்ன காரணம்? கூகுளின் இந்த புதிய வரவு பாரம்பரிய கேமிங் நிறுவனங்களுக்கு உண்மையில் அச்சுறுத்தலா?

கேம் உருவாக்கத்தில் புதிய புரட்சி

கூகுள் ஜீனி 3 என்பது சாதாரண மென்பொருள் அல்ல. இது ஒரு சக்திவாய்ந்த 'ஜெனரேட்டிவ் ஏஐ' (Generative AI). இதன் மூலம் ஒருவர் வெறும் வார்த்தைகளை டைப் செய்தோ அல்லது ஒரு புகைப்படத்தை உள்ளீடு செய்தோ, முழுமையான டிஜிட்டல் உலகத்தை நொடிப்பொழுதில் உருவாக்க முடியும். ஆகஸ்ட் 2025-ல் முதன்முதலாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம், இப்போது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமே, கேமிங் சூழலை (Virtual Environments) மிக எளிதாக உருவாக்குவதும், அதை உடனுக்குடன் மாற்றி அமைப்பதும்தான்.

முதலீட்டாளர்களின் அச்சம் நியாயமானதா?

இந்த தொழில்நுட்பம் வந்தவுடனேயே, Unity, Roblox, Take-Two Interactive மற்றும் Nintendo போன்ற ஜாம்பவான் நிறுவனங்களின் பங்குகள் ஆட்டம் கண்டன. "இனி கேம் டெவலப்பர்கள் இல்லாமலே சாதாரண மக்களே கேம்களை உருவாக்கிவிடுவார்களா?" என்ற பயம் முதலீட்டாளர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது. ஃப்ரீடம் கேப்பிடல் (Freedom Capital) என்ற நிதி நிறுவனம், "இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட எதிர்வினை" என்று கூறியுள்ளது. முதலீட்டாளர்கள் அவசப்பட்டு பங்குகளை விற்றதே இந்த திடீர் சரிவுக்கு முக்கிய காரணம் என்று அவர்கள் கணிக்கின்றனர்.

நிபுணர்களின் நம்பிக்கை: பயப்படத் தேவையில்லை

பங்குச்சந்தை நிலவரம் தற்காலிகமாக சரிந்தாலும், நீண்ட கால அடிப்படையில் கேமிங் நிறுவனங்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என நிபுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள். உதாரணமாக, Take-Two Interactive நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் 14% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பெரும்பாலான சந்தை வல்லுநர்கள் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கவே பரிந்துரைக்கின்றனர்.

எதிர்காலம் எப்படி இருக்கும்?

செயற்கை நுண்ணறிவு என்பது கேமிங் துறைக்கு ஒரு கருவியாக இருக்குமே தவிர, அது முழுவதுமாக மனிதர்களின் படைப்பாற்றலை அழித்துவிடாது என்பது வல்லுநர்களின் கருத்து. கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (GTA VI) போன்ற பிரம்மாண்டமான கேம்களின் வெளியீடு தாமதமானாலும், அவற்றிற்கான எதிர்பார்ப்பு குறையவில்லை. எனவே, கூகுள் ஜீனி 3 போன்ற தொழில்நுட்பங்கள் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துமே தவிர, பாரம்பரிய கேமிங் நிறுவனங்களை அழித்துவிடாது என்பதே தற்போதைய கணிப்பு.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

புதிய போன் வாங்கணுமா? கூகுள் பிக்சல் 10 மீது மெகா தள்ளுபடி - மிஸ் பண்ணாதீங்க!
பிரீமியம் போன் இவ்வளவு கம்மி விலையா? சாம்சங் S24 வாங்க இதுவே சரியான நேரம்!