டக்கரான மூன்று மாடல்கள்.. Samsung Galaxy S24 சீரிஸ்.. இந்தியாவில் எப்போது லான்ச்? விலை மற்றும் ஸ்பெக் இதோ!

By Ansgar R  |  First Published Dec 30, 2023, 10:26 AM IST

Samsung Galaxy S24 Series Price and Specs : இந்த 2023ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ள நிலையில், எதிருவரும் 2024ம் Gadget ஆர்வலர்களுக்கு ஒரு சுவையான ஆண்டாகவே இருக்கப்போகிறது என்றே கூறலாம். மேலும் அதை இன்னும் இனிப்பாக சாம்சங் நிறுவனம் தனது மூன்று புதிய அறிமுகங்களை வெளியிடவுள்ளது.


தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், எதிர்வரும் ஜனவரியின் நடுப்பகுதியில் அதன் மூன்று மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவை தான் Galaxy S24, Galaxy S24+ மற்றும் Galaxy S24 Ultra ஆகிய மொபைல்கள். சரி இந்த மாடல்களின் ஸ்பெக் மற்றும் உத்தேச விலை பற்றி பின்வருமாறு காணலாம். 

சாம்சங் Galaxy S24 ஆனது 6.2-இன்ச் AMOLED 2x FHD டிஸ்ப்ளே, 8K வீடியோ பதிவுக்கான சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் பிரதான கேமரா, 30x ஸ்பேஸ் ஜூம் வரை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் 8GB RAM வசதியுடன் 128 ஜிபி மற்றும் 256 ROM என்று இரு வகைகளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த் ஸ்மார்ட்போனில் 4,000எம்ஏஎச் பேட்டரியும் இருக்கலாம் என்றும், 30 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜை அடைய உதவும் பாஸ்ட் சார்ஜிங் இருக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் விலை சுமார் 82,000 வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

undefined

சாம்சங் Galaxy S24+, இந்த பிளஸ் மாறுபாட்டிற்கு, Samsung அதன் S24 மாறுபாட்டிற்கு ஒத்த கேமரா அமைப்பைப் பயன்படுத்தப் போகிறது. இருப்பினும், இதில் 6.7-இன்ச் AMOLED 2x QHD+ டிஸ்ப்ளே, 4,900mAh பேட்டரி, 12GB RAM மற்றும் 256GB அல்லது 512GB ROM விருப்பங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்தில் இருந்து துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

உச்சகட்ட மாடலாக Samsung Galaxy S24 Ultra அறிமுகமாக உள்ளது, இது 6.8-இன்ச் AMOLED 2x QHD+ டிஸ்ப்ளே மற்றும் 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பைப் பொறுத்தவரை, மூன்று வகைகளும் S23 மாடல்களைப் போலவே இருக்கும். இருப்பினும், அல்ட்ரா மாடல் இன்னும் தட்டையான திரையுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் 1,20,000 முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!