சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங்கின் புதிய மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனாக இந்த மாடல் வெளியாகி இருக்கிறது. மேலும் இது சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி F22 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.
புதிய சாம்சங் கேலக்ஸி F23 5ஜி மாடலில் 6.6 இன்ச் FHD+ LCD இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம், ரேம் பிளஸ் அம்சம், பவர் கூல் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யு.ஐ. 4.1 கொண்டிருக்கிறது.
undefined
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி F23 5ஜி மாடல் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
சாாம்சங் கேலக்ஸி F23 5ஜி அம்சங்கள்
- 6.6 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே
- காரினிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
- அட்ரினோ 619 GPU
- 4GB / 6GB ரேம்
- 128GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 4.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8
- 8MP 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 8MP செல்ஃபி கேமரா, f/2.2
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- சாம்சங் பே
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய சாம்சங் கேலக்ஸி F23 5ஜி ஸ்மார்ட்போன் அக்வா புளூ மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 17,499 என்றும் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 18,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக ஸ்மார்ட்போன் முறையே ரூ. 14,999 மற்றும் ரூ. 15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. கேலக்ஸி F23 5ஜி மாடலின் விற்பனை ப்ளிப்கார்ட், சாம்சங் இந்தியா இ ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் மார்ச் 16 ஆம் தேதி துவங்குகிறது.