பிரைவசி பயம் குறித்து இனி கவலை வேண்டாம்.! Alt Z life தொழில்நுட்பத்தில் சாம்சங்கின் அட்டகாசமான Galaxy A51, A71

By Asianet Tamil  |  First Published Oct 4, 2020, 11:51 AM IST

பிரைவசி பயம் குறித்து இனி கவலை வேண்டாம்.  Alt Z life தொழில்நுட்பத்தில் அசத்தும் சாம்சங் Galaxy A51, A71  ஸ்மார்ட்போன்கள் அட்டகாசமான அம்சங்களுடன் தயாராகி இருக்கிறது. 
 


Alt Z life தொழில்நுட்பத்தில் அசத்தக்கூடிய சாம்சங் Galaxy A51, A71 ஸ்மார்ட்போன்கள் இருக்கும்போது இனி பிரைவசி குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்றும், சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அட்டகாசமான அம்சங்களுடன் தயாராகி இருக்கிறது என்றும் சாம்சங் நிறுவன நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:

Tap to resize

Latest Videos

சாம்சங் Galaxy A51, A71 தற்போது ஸ்மார்ட்போன் என்பது ஒரு அத்தியாவசிய பொருளாகவே மாறியிருக்கிறது. முக்கிய தகவல்களை சேகரிக்க, கேம்ஸ் உள்ளிட்டவை மூலம் பொழுதை கழிக்க, ஓ.டி.டி. சேவைகளை அனுபவிக்க, கல்வி மற்றும் தொழில்சார்ந்த பணிகளுக்காக ஆன்-லைன் வீடியோ உரையாடல் என பல்வேறு தேவைகளுக்காக ஒவ்வொரு கைகளிலும் நீங்காமல் சிக்குண்டு கிடப்பது ஸ்மார்ட்போன் என்றால் அது மிகையல்ல. அந்தவகையில் மேற்கண்ட அனைத்து அம்சங்களிலும் தனித்துவமாக விளங்கும் சாம்சங் நிறுவனம் தனது அட்டகாசமான Galaxy A51, A71  ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் அட்டகாசமான திரையும் (screen), கேமராவும், நீடித்து உழைக்கும் பேட்டரி திறனும் இந்த ஸ்மார்ட்போனுக்கு இன்னும் சிறப்பு சேர்ப்பதாகவே அமைகிறது. குறிப்பாக சமீபத்திய ஆய்வின்படி இந்த ஆண்டு அதிகம் விற்பனையாகி இருக்கும் ஸ்மார்ட்போன் என்ற சிறப்பை சாம்சங் Galaxy A51 ஸ்மார்ட்போன் பெற்றிருக்கிறது. குறிப்பாக இந்த சாம்சங் Galaxy A51 ஸ்மார்ட்போனில் புகுத்தப்பட்டிருக்கும் Alt Z life எனும் சிறப்பம்சம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. 

Alt Z life தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் நமது தனிப்பட்ட தகவல்களை பிறர் அறியாத வகையில் பாதுகாப்பது தான் இதன் தனித்துவமாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நமது பிரைவசியும் பாதுகாக்கப்படுகிறது. இன்றைய தலைமுறையினர் பல்வேறு விதமான தகவல்களை செல்போனில் சேகரித்து வைத்துள்ளனர். அதை பாதுகாப்பாக வைத்திருக்க படாதபாடு படுகிறார்கள். இன்றைய தலைமுறையினரின் எண்ண ஓட்டடத்துக்கு ஏற்றபடியே சாம்சங் நிறுவனம் Galaxy A51, A71 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக Alt Z life தொழில்நுட்பம் மூலம் நமது ரகசியங்கள் 100 சதவீதம் பாதுகாக்கப்படுகிறது. 

உடன்பிறந்தவர்களோ, உறவினர்களோ, நண்பர்களோ நமது செல்போனை கேட்டால் போதும், நமக்கு ஒருவித தயக்கம் நிச்சயம் ஏற்படும். காரணம் அதில் நாம் ரகசியமாக வைத்திருக்கும் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ, இன்ன பிற தகவல்களையோ அவர்கள் பார்த்திடகூடுமோ என்ற அச்சமே... இந்த அச்சத்தை போக்கும்வகையில் Quick switch மற்றும் Content suggestions எனும் இரு புதுவித யுக்திகளை உள்ளடக்கிய சாம்சங் Galaxy A51, A71 ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. 

Quick switch:  

Quick switch என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். திடீரென நமது செல்போனை யாராவது கேட்டால் power switch-ஐ 2 தடவை press செய்து விடலாம். உடனடியாக private mode-ல் இருந்து general mode-க்கு செல்போன் மாறிவிடும். உதாரணமாக நீங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவரும் ஒரு வீடியோவை பார்க்கும்போது, திடீரென உங்கள் நண்பர் செல்போனை கேட்கிறார். 

அந்த நொடி தயங்காமல் power switch-ஐ இரண்டு முறை தட்டி விட்டுக் கொடுத்தால் போதும். உடனடியாக தொழில் நுட்பங்கள் சார்ந்த ஏதாவது விஷயங்கள் திரையில் தோன்றி விடும். இப்படி நமது நடவடிக்கைகளை பிறர் அறியாத வண்ணம் நாம் நேர்த்தியாக சந்தேகம் வராமல் பாதுகாக்க முடியும்.

Content suggestions: 

அதேபோல Content suggestions என்பது முக்கியமான சிறப்பம்சமாகும். இது ஸ்மார்ட் போனில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் ஸ்கேன் செய்யும். Seen detection மற்றும் face detection என்று ஸ்கேன் செய்யும் முறையும் இரு வகைப்படும். Seen detection என்பது பிரைவசிக்கு உரிய வாய்ப்புகள் இருக்கும் புகைப்படங்களை அதுவே தெரியப்படுத்தும். Face detection-ல் நாம் ஒரு நபரின் புகைப்படத்தை குறிப்பிட்டால் போதும்,

செல்போனில் அந்த நபரின் அனைத்து புகைப்படங்களும் அடுத்த நொடியே ஸ்கேன் செய்யப்பட்டு தனி folder-க்கு சென்றுவிடும். இதுதவிர Galary-ல் இருந்து தேவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நாமே தேர்வு செய்தும் secure folder-க்கு அனுப்ப முடியும். மேலும் Knox எனும் மேம்பட்ட அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனில் hardware chip-ல் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரகசிய டேட்டாக்கள், ரகசியமான கோப்புகள், பண பரிவர்த்தனை விவரங்கள், பாஸ்வேர்டுகள், புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவை பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பும் வகையில் flagship camera features இணைக்கப்பட்டிருக்கிறது. 

சிறப்பம்சங்கள்:

Single take எனும் ஆப்ஷன் சிறந்த புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. ஸ்மார்ட்போனில் Single take வசதி மூலம் குறிப்பிட்ட வினாடிகளுக்குள் அதிக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்க முடியும். Stylise image, short movie, GIF animation ஆகியவையும் இதில் அடங்கும். மேலும் இவை உடனுக்குடன் Gallery-யிலும் பதிவாகிவிடும். இதன்மூலம் தரமான சிறந்த புகைப்படங்களை நாம் கண்டறிந்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைய முடியும். நமது புகைப்படங்கள் பிறர் வியக்கும் அளவு இருக்க வேண்டும் என்று நினைப்பது சரிதானே? Night hyperlapse மூலம் குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான தரமான படங்களை எடுக்க முடியும். இதனால் இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது வேண்டிய, விரும்பிய வீடியோக்களை அழகாக எடுத்து தெளிவாக பார்த்து ரசிக்கலாம். எந்த காட்சியையும் எடுத்து பார்த்து மகிழலாம். இதிலும் Custom Filter, Quick Video Recording, Switch Camera While Recording (Currently on Galaxy A51), AI Gallery Zoom and  Smart Selfie angle என பலவித சிறப்பு உட்பிரிவுகள் உண்டு. 

சாம்சங் Galaxy A51   

6GB RAM, 128GB internal storage கொண்ட சாம்சங் Galaxy A51 ஸ்மார்ட்போனின் விலை ரூ.22 ஆயிரத்து 999 ஆகும். 8GB RAM, 128GB internal storage கொண்ட சாம்சங் Galaxy A51 ஸ்மார்ட்போனின் விலை ரூ.24 ஆயிரத்து 499 ஆகும். Prism Crush White, Prism Crush Black, Prism Crush Blue and Haze Crush Silver ஆகிய கண்ணை பறிக்கும் 4 வண்ணங்களில் கிடைக்கிறது. 6.5 inch super AMOLED full HD+ (1,080*2,400 pixels) display, octa-core Exynox 9611 SoC, vivid and punchy display என அட்டகாசமான அம்சங்களுடன் தயாராகி இருக்கிறது சாம்சங் Galaxy A51. இதன்மூலம் நண்பர்களுடன் ஒரே நேரத்தில் யூ-டியூப் உள்ளிட்ட வலைதள வீடியோ காட்சிகளை ஒருசேர பார்த்து ரசிக்கலாம். 4000 mAh பேட்டரி திறன், 15W Fast Charging திறனேற்றம் கொண்டது. இதனால் விரும்பும் விளையாட்டுகளை தொடர்ந்து விளையாடி மகிழலாம். One UI 2.0 சாப்ட்வேர் (based on Android10) இணையப்பெற்றது. 

சாம்சங் Galaxy A71   

அடுத்ததாக சாம்சங் Galaxy A71 பார்க்கலாம். இது 6.7 inch (1,080*2,400 pixels) Infinity-O super AMOLED plus display, Qualcomm's Snapdragon 730 Octa-core chipset, 8GB RAM, 128GB storage வசதிகள் உள்ளடங்கப்பெற்றது. ஒரேநேரத்தில் பல தரவுகளையும், பல திரைப்பக்கங்களையும் செயல்படுத்தி பயன்படுத்த முடியும். 4500 mAh பேட்டரி திறன், 25W Fast Charging திறனேற்றம் கொண்டது. சாம்சங் Galaxy A71 ஸ்மார்ட்போன் விலை ரூ.29 ஆயிரத்து 499 ஆகும். 

பிரைவசி பயத்துக்கு குட்பை:

மற்ற ஸ்மார்ட்போன்களை ஒப்பிடுகையில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுப்பதில் அலாதி பிரியத்தையும், அட்டகாசமான அம்சத்தையும் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் இருப்பதை வாடிக்கையாளர்கள் நிச்சயமாக உணரலாம். அதேவேளை பிரைவசி குறித்த பயத்துக்கும் குட்பை சொல்லும் வகையிலான சாம்சங் Galaxy A51, A71 ஸ்மார்ட்போன்கள் இருக்கும்போது இனி கவலைகள் எதற்கு? சுதந்திரமான நடவடிக்கைகளை வாடிக்கையாளர்கள் கையாளலாம். ஸ்மார்ட்போன்களை எந்நேரமும் கையிலேயே வைத்திருந்து ரகசியங்களை பாதுகாக்க தேவையில்லை. இனி உங்கள் ஸ்மார்ட்போன் உங்கள் வசம். உங்கள் ரகசியங்களை உங்கள் அனுமதியில்லாமல் இனி யாரும் பார்த்துவிட முடியாது. அந்தவகையில்  சாம்சங் Galaxy A51, A71 ஸ்மார்ட்போன்கள் பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டுள்ளன என சாம்சங் நிறுவன நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

click me!