கிராம பஞ்சாயத்தில் நடக்கும் திட்டப்பணிகள், நிவாரணங்கள், ஊராட்சி மன்றத்தத் தலைவரின் செயல்பாடுகள், கிராமங்களின் விவரங்கள் என அத்தனை விவரங்களையும் ஒருங்கிணைத்து அவ்வப்போது தகவல்களாக தருகிறது டிஎன்பஞ்சாயத்து.காம் இணையதளம்.
கிராம பஞ்சாயத்தில் நடக்கும் திட்டப்பணிகள், நிவாரணங்கள், ஊராட்சி மன்றத்தத் தலைவரின் செயல்பாடுகள், கிராமங்களின் விவரங்கள் என அத்தனை விவரங்களையும் ஒருங்கிணைத்து அவ்வப்போது தகவல்களாக தருகிறது டிஎன்பஞ்சாயத்து.காம் இணையதளம்.
தேசிய, மாநில, மாவட்ட அளவிலான திட்டப்பணிகள், எம்.எல்.ஏ- எம்.பி.,கள் அதிக பட்சம் நகர பஞ்சாயத்துகளில் அதிகாரத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகள் செய்தியாக வெளியாகி மக்களுக்கு தெரியவரும். ஆனால், கிராம பஞ்சாயத்து அளவில் ஊராட்சி மன்றத் தலைவர்களின் செயல்பாடுகள், அவர்கள் அர்ப்பணிப்போடு செய்யும் சேவைகள், அந்த கிராமத்தை பற்றிய தகவல்கள், வார்டு மெம்பர்களை பற்றிய தகவல்கள் இவை அனைத்தும் வெளியே தெரிவதில்லை. செய்தியாகவும் வெளிவருவதில்லை.
undefined
இஅந்திய அரசியலமைப்பின் ஆனிவேரே உள்ளாட்சி அமைப்புகள்தான். குறிப்பாக கிராம பஞ்சாயத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரப்படுகிறது. அப்படி பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணை தலைவர்கள், வார்டு மெம்பர்களின் செயல்பாடுகளை பதிவு செய்து ஊக்கப்படுத்துகிறது இந்த இணையதளம்.
அத்தோடு ஒரே பெயரில் எத்தனை ஊராட்சிகள் உள்ளன. அந்த ஊராட்சியின் செயல்பாடுகள் என்ன? இப்போது சம்பந்தப்பட்ட ஊராட்சிகளின் நிலவரம் என்ன? உள்ளாட்சி அதிகாரம், வரைமுறைகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து தகவல்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்மண்டலம், வடமண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம் என தமிழகத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஊராட்சி மன்ற தலைவர்களின் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளதால் பலரும் தங்களது சேவைகளை முன் வந்து பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தத்தளத்தை பார்வையிட