இரண்டு புது மாடல்கள் - இணையத்தில் லீக் ஆன சாம்சங் பிளான்?

Nandhini Subramanian   | Asianet News
Published : Mar 02, 2022, 03:53 PM IST
இரண்டு புது மாடல்கள் - இணையத்தில் லீக் ஆன சாம்சங் பிளான்?

சுருக்கம்

சாம்சங் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A மற்றும் கேலக்ஸி M சீரிசில் புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. முன்னதாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A13 4ஜி மற்றும் கேலக்ஸி M23 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் இடம்பெற்று வந்தது. தற்போது இரு மாடல்களும் சாம்சங் வலைதளத்திலேயே இடம்பெற்று இருக்கின்றன.

அந்த வகையில், கேலக்ஸி A13 4ஜி மற்றும் கேலக்ஸி M23 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றே தெரிகிறது. கேலக்ஸி A13 மாடல் சாம்சங் இந்தியா,  ரஷ்யா மற்றும் சுவிட்சர்லாந்து வலைதளங்களிலும் கேலக்ஸி M32 5ஜி மாடல் ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் ரஷ்ய வலைதளங்களிலும் இடம்பெற்று இருக்கின்றன. 

வலைதளங்களில் கேலக்ஸி A13 4ஜி ஸ்மார்ட்போன் SM-A135F/DS எனும் மாடல் நம்பரும், கேலக்ஸி M32 5ஜி ஸ்மார்ட்போன் SM-M236B/DS மாடல் நம்பர் கொண்டிருக்கின்றன. இரு ஸ்மார்ட்போன்களிலும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. 

கீக்பென்ச் தளத்தில் வெளியான தகவல்களின் படி கேலக்ஸி A13 4ஜி மாடலில் எக்சைனோஸ் 850 சிப்செட், 3GB ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., IPS LCD ஸ்கிரீன், 5000Ah பேட்டரி மற்றும் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. கேலக்ஸி M32 5ஜி மாடலில் OIS வசதி கொண்ட 50MP கேமராக்கள், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல்: ரூ.14,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 10! வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
அனுமதி இல்லாமல் போட்டோவை பயன்படுத்தினால் சிறை?.. டீப் ஃபேக் மசோதா சொல்வது என்ன? முழு விவரம் இதோ!