ரிலையன்ஸ் ஜியோ புக் லேப்டாப்பை ஜியோ நிறுவனம் ரூ.16,499க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை, சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய பட்ஜெட் லேப்டாப் ஜியோ புக் (2023) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் மலிவு விலையில் வருகிறது. இந்த லேப்டாப்பில் ரூ.16,499 விலையில், நீங்கள் ஸ்டைலான மேட் ஃபினிஷ் வடிவமைப்பைப் பெறுவீர்கள். இது ஒரு அல்ட்ரா ஸ்லிம் லேப்டாப் ஆகும்..
இது 11.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஆனால் எடை 990 கிராம் மட்டுமே. இதன் டிஸ்ப்ளே ஆண்டி-க்ளேர் பேனல் பொருத்தப்பட்டுள்ளது. ஜியோ புக் (2023) 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. SD கார்டு மூலம் சேமிப்பகத்தை அதிகரிக்கலாம்.
ஜியோபுக் விலை
ஜியோபுக்கின் இந்த லேட்டஸ்ட் மாடல் ரூ.16,499க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை நீங்கள் வாங்க விரும்பினால், ஆகஸ்ட் 5 முதல் ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் அமேசான் இந்தியா வழியாக வாங்கலாம்.
குறைந்த எடை
ஜியோ புக் (JioBook) ஆனது 11.6-இன்ச் HD டிஸ்ப்ளே மற்றும் ஆண்டி-க்ளேர் அம்சத்துடன் கிடைக்கிறது. சாதனம் நேர்த்தியான வடிவமைப்புடன் வருகிறது மேட் பினிஷிங் இருப்பது சிறந்த லுக்கை வழங்குகிறது. மெலிதான வடிவமைப்பு 990 கிராம் மட்டுமே எடையுள்ளதாக இருக்கிறது.
சிறந்த பிராசஸர்
ஜியோ புக் ஆனது 2.0 GHz ஆக்டா கோர் செயலியைக் கொண்டுள்ளது. சிப்செட் 4GB LPDDR4 ரேம் மற்றும் 64GB சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சேமிப்பகம் குறைவாக இருந்தால், SD கார்டு வழியாக 256ஜிபி வரை அதிகரிக்கலாம்.
Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!
100GB கிளவுட் ஸ்டோரேஜ் இலவசம்
256 ஜிபி சேமிப்பிடம் குறைவாக இருக்கிறது என்று நினைப்பவர்கள், ரிலையன்ஸ் ஜியோ இந்த லேப்டாப் உள்ள பயனர்களுக்கு 100ஜிபி டிஜிபாக்ஸ் கிளவுட் ஸ்டோரேஜை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.
வெப்கேமரா
மடிக்கணினியில் வெப்கேம் இருப்பது மிகவும் முக்கியமானது ஆகும். குறிப்பாக நீங்கள் அதை படிக்க அல்லது அலுவலக வேலைக்காக பயன்படுத்தினால். குறைந்த விலை இருந்தபோதிலும், நிறுவனம் 2MP வெப்கேமைச் சேர்த்துள்ளது.
நீண்ட பேட்டரி
மடிக்கணினிகளில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை குறைந்த பேட்டரி பேக்கப் ஆகும். ஆனால் புதிய ஜியோபுக்கில் இருக்கும் 4,000எம்ஏஎச் பேட்டரி மூலம் பயனர்கள் 8 மணிநேர பேட்டரி பேக்கப்பைப் பெற முடியும் என்று ஜியோ கூறியுள்ளது.
ஜியோ புக் அம்சங்கள்
ஜியோ புக்கில் ஒரு சிறிய கீபோர்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 75 க்கும் மேற்பட்ட விசைப்பலகை சார்ட்காட்ஸ் இருப்பதாக ஜியோ நிறுவனம் கூறுகிறது.
படிப்பதற்கு உதவுகிறது
ஜியோ புக்குக்கான JioOS இயங்குதளமானது Jio TV ஆப்ஸுடன் வருகிறது. இது மடிக்கணினியில் உள்ளடக்கத்தைப் படிக்கவும், கற்றுக்கொள்ளவும் பயன்படுத்தப்படலாம். இதில் JioBIAN உள்ளது. இது C/C++, Java, Python மற்றும் Pearl போன்ற பல்வேறு நிரலாக்க மொழிகளை மாணவர்கள் எளிதாகக் கற்க உதவுவதாகக் கூறுகிறது.
கேமிங் வசதி
கேமிங்கைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல ஹார்டுவேர் செட்டைப் பெறவில்லை என்றாலும், ஜியோ கிளவுட் கேம்ஸ் மூலம் பயனர்கள் இந்த பட்ஜெட் லேப்டாப்பில் நிறைய கேமிங்கை அனுபவிக்க முடியும். இது ஒரு கிளவுட் கேமிங் சேவையாகும். இதன் காரணமாக பயனர்கள் பட்ஜெட் சாதனங்களில் கூட கிராபிக்ஸ் தேவைப்படும் கேம்களை விளையாட முடியும்.
ஜியோபுக் லேப்டாப்
இந்த லேப்டாப்பில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பு உள்ளது. இணைப்பு விருப்பங்களில் 3.5mm ஆடியோ ஜாக், 2 USB-A போர்ட்கள், ஒரு மினி HDMI போர்ட் ஆகியவை அடங்கும்.
Hero Bikes : ரூ.57 ஆயிரத்துக்கு கிடைக்கும் பைக்குகள்.. வேற மாறி ஆஃபர் - முழு விபரம் இதோ !!