
தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் 5ஜி மொபைல் தளங்களை அறிமுகப்படுத்திய 10 மாதங்களுக்குள் 3 லட்சத்திற்கும் அதிகமான தளங்களை நிறுவியுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 714 மாவட்டங்களில் 5ஜி தளங்கள் நிறுவப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "உலகின் அதிவேக 5G வெளியீடு தொடர்கிறது. 714 மாவட்டங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான 5G தளங்கள் நிறுவப்பட்டுள்ளன" என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் மட்டுமே நாட்டில் 5ஜி சேவைகளை வெளியிடும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் ஆகும். கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவை தொடங்கப்பட்ட 10 மாதங்களுக்குள் 3 லட்சத்திற்கும் அதிகமான தளங்கள் நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ள டேட்டா காட்டுகிறது.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, சேவை தொடங்கப்பட்ட ஐந்து மாதங்களுக்குள் 1 லட்சம் தளங்களும், எட்டு மாதங்களுக்குள் 2 லட்சம் தளங்களும் நிறுவப்பட்டுள்ளன.
Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.