ஒரு வருட வேலிடிட்டியுடன் 2 புதிய சலுகைகள் - மாஸ் காட்டிய ரிலையன்ஸ் ஜியோ!

By Kevin Kaarki  |  First Published Mar 19, 2022, 9:53 AM IST

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தினசி டேட்டா வழங்கும் புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் பலன்களை பார்ப்போம்.


இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ டேட்டா மட்டும் வழங்கும் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ. 2,878 மற்றும் ரூ. 2,998 விலையில் கிடைக்கும் புதிய சலுகைகளை ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தின் 'work from home data packs' பிரிவில் பார்க்க முடியும். நீண்ட காலத்திற்கு டேட்டா பலன்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து இவை அறிவிக்கப்பட்டு உள்ளன.

புதிய ரிலையன்ஸ் ஜியோ ரூ. 2878 மற்றும் ரூ. 2998 பிரீபெயிட் சலுகைகளில் வாய்ஸ் காலிங் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. ஜியோ ரூ. 2878 பிரீபெயிட் சலுகையில் தினமும் 2GB டேட்டா, 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் ஒட்டுமொத்தமாக பயனர்களுக்கு 730GB டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை கடந்ததும், டேட்டா வேகம் 64Kbps என குறைந்து விடும்.

Tap to resize

Latest Videos

undefined

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 2998 சலுகையில் தினமும் 2.5GB டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் ஒரு ஆண்டு முழுக்க பயனர்களுக்கு 912.5GB டேட்டா வழங்கப்படுகிறது. இதிலும் டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை கடந்ததும், இதிலும் டேட்டா வேகம் 64Kbps என குறைக்கப்பட்டு விடும். 

வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பேஸ் பிளான் உடன், தினசரி டேட்டா அளவை அதிகப்படுத்தும் நோக்கத்திலேயே புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. வீட்டில் இருந்தபடி பணியாற்றுவோர், தங்களுக்கு சற்றே அதிக டேட்டா வேண்டும் என்ற பட்சத்தில் இரு சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். ஜியோ ரூ. 2878 மற்றும் ரூ. 2998 பிரீபெயிட் சலுகைகள் டேட்டா மட்டும் விரும்புவோருக்கு கச்சிதமான சலுகைகளாக இருக்கும்.

நீண்ட கால வேலிடிட்டி கொண்டிருப்பதால், பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பேஸ் பிளான் வேலிடிட்டி தீர்ந்து போனாலும், டேட்டா சலுகையை தொடர்ந்து பயன்படுத்த முடியும். அதன்படி வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியவில்லை என்ற போதிலும், தொடர்ந்து மொபைல் டேட்டாவை பயன்படுத்தலாம். தினமும் அதிகளவு மொபைல் டேட்டா பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்களுக்கு இவை சிறப்பான சலுகைகளாக இருக்கும். 

புதிய ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளில் ஒன்றை ரிசார்ஜ் செய்ய ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது மைஜியோ செயலியில் இருந்தபடி மேற்கொள்ளலாம். இவை தவிர டேட்டா பலன் மட்டுமே வழங்கும் இதர சலுகைகளயும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வருகிறது.

click me!