
மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. மஹிந்திரா XUV700 மாடலுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படாத நிலையில், மற்ற கார் மாடல்களுக்கு கவர்ச்சிகர சலுகை மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
மஹிந்திரா ஸ்கார்பியோ மூன்று ரோ எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 4 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஃபிளாக்ஷிப் அல்டுராஸ் G4 எஸ்.யு.வி. மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
எம்.பி.வி. மாடல்கள் பிரிவில் மராசோ மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 5 ஆயிரத்து 200 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மஹிந்திரா XUV300 மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை ரூ. 5 ஆயிரம் இதர சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா பொலிரோ மாடலுக்கு ரூ. 24 ஆயிரம் வரையிலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவை கார்ப்பரேட் சலுகை, தள்ளுபடி, இதர தலுகைகள் வடிவில் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா KUV100 NXT மாடலுக்கு ரூ. 38 ஆயிரத்து 055 வரையிலான தள்ளுபடி, ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா தார், XUV700 மற்றும் மஹிந்திரா நியோ போன்ற மாடல்களுக்கு இந்த மாதம் எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. மற்ற மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் மார்ச் 31, 2022 வரை பொருந்தும். மேலும் சலுகை பலன்கள் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வேரியண்ட், விற்பனையாளர்கள் மற்றும் ஸ்டாக் இருப்புக்கு ஏற்ப வேறுபடும்.
சலுகைகள் தவிர மஹிந்திரா நிறுவனம் நான்கு புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் பற்றி மஹிந்திரா இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. எனினும், புதிய மாடல்களுக்கான டீசர் வெளியாகி இருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் வெளியீடு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.