Jio ரீசார்ஜ் ஆஃபரில் இருந்து Hotstar நீக்கம்! பயனர்கள் அதிர்ச்சி!!

By Dinesh TG  |  First Published Oct 14, 2022, 10:06 AM IST

ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டங்களில் இருந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆஃபர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கின் ரீசார்ஜ் பிளான்களில் இரண்டு ஸ்ட்ரீமிங் திட்டங்களைத் தவிர மற்ற அனைத்தில் இருந்தும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா ஆஃபரை நீக்கியுள்ளது. இதனால் தற்போது வெறும் இரண்டு ரீசார்ஜ் திட்டங்களில் மட்டுமே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் கிடைக்கிறது.

இதுகுறித்து TelecomTalk தளத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, ஜியோ ரீசார்ஜ் பிளான்களான ரூ.499, ரூ.601, ரூ.799, ரூ.1,099, ரூ.333, ரூ.419, ரூ.583, ரூ.783, ரூ.1,199  ஆகிய திட்டங்களில் இருந்து டிஸ்னி+ஹாட்ஸ்டார் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவை அனைத்தும் ரீசார்ஜ் செய்யும்போது அவற்றில் ஹாட்ஸ்டார் இனி கிடைக்காது. இருப்பினும், ஏற்கனவே மேற்கண்ட திட்டங்களில் ரீசார்ஜ் செய்துள்ள பயனர்கள், அந்த ரீசார்ஜ் செல்லுபடியாகும் வரை தொடர்ந்து ஹாட்ஸ்டாரைப் பயன்படுத்த முடியும்.

Latest Videos

undefined

ரூ.1,499, ரூ.4,199 ஆகிய ரீசார்ஜ் பிளான்களில் மட்டும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா ஆஃபர் உள்ளது. ஆனால் இந்த ஆஃபரும் நீண்ட காலத்திற்கு இருக்குமா என்பது குறித்து தெளிவான விவரங்கள் வரவில்லை. மேலும், இந்த இருதிட்டங்களும் ஹாட்ஸ்டார் பிரீமியம் வழங்குவதால், HD வீடியோக்கள், ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் பார்க்கலாம். அதாவது, இது மொபைல் சந்தா திட்டம் இல்லை. 

ஜியோ ரீசார்ஜ் திட்டத்தின்படி, ரூ.1,499 பிளானில் 2ஜிபி தினசரி டேட்டா, வீதம் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, ரூ.4,199 பிளானில் 365 நாட்களுக்கு 3ஜிபி தினசரி டேட்டா வழங்கப்படுகிறது. இரண்டு திட்டங்களும் அன்லிமிடெட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகின்றன.

Moto பயனர்களுக்கு நற்செய்தி! Moto 5G ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவை அமல்!!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்கள் ஏன் குறைந்தன?

இதுவரையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாக்களை வழங்கும் நிறுவனமாக ஜியோ இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது ஹாட்ஸ்டார் ஆஃபரை நீக்குவதற்கான கைவிடுவதற்கான காரணத்தை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், அடுத்த ஐபிஎல் சீசனை ஸ்ட்ரீம் செய்யும் உரிமை டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு இல்லை என்று தெரிகிறது. அதற்கான உரிமைகள் இப்போது Viacom18 பெற்றுள்ளது. இது ரிலையன்ஸ் கைப்பற்றியுள்ள TV18 நிறுவனத்தின் ஒரு அங்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிறது Google Passkey.. இனி கைரேகை வைத்தாலே போதும்.. எதை வேண்டுமானாலும் லாகின் செய்யலாம்

click me!