
இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL), தனது 48-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் (AGM) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. AI (செயற்கை நுண்ணறிவு) துறையில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜாம்நகரில் ஒரு புதிய கிளவுட் மையத்தை (Cloud region) அமைக்கப் போவதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
ஜாம்நகர் கிளவுட் மையம்
ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்படும் இந்த கிளவுட் மையம், கூகுள் கிளவுட்-இன் உலகத் தரம் வாய்ந்த AI மற்றும் கணினி திறன்களால் இயக்கப்படும்.
இந்த மையம், ரிலையன்ஸின் எரிசக்தி, சில்லறை வர்த்தகம், தொலைத்தொடர்பு மற்றும் நிதிச் சேவைகள் போன்ற துறைகளில் AI தொழில்நுட்பத்தை விரைவாகப் பயன்படுத்த உதவும்.
இந்த கிளவுட் மையத்திற்குத் தேவையான ஆற்றலை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மூலம் பெறப்படும். மேலும், ஜியோவின் விரிவான நெட்வொர்க் மூலம் இணைப்பு வசதி வழங்கப்படும்.
ரிலையன்ஸ் - கூகுள் கூட்டு முயற்சி
இந்த கூட்டாண்மை குறித்து பேசிய ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, "ரிலையன்ஸின் உள் கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நாடு தழுவிய நெட்வொர்க்கின் ஆதரவுடன், கூகுள் கிளவுட்-இன் AI திறன்களை ஜாம்நகருக்கு கொண்டு வருவதன் மூலம், AI துறையில் இந்தியா ஒரு உலகளாவிய தலைவராக உருவெடுப்பதற்கு நாங்கள் அடித்தளம் அமைத்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
ஜாம்நகர் கிளவுட் மையத்தில், கூகுள் தனது AI ஹைபர்கம்ப்யூட்டரை நிறுவி, பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கும். இது தவிர, கூகுள் ஜெனரேட்டிவ் AI மாடல்கள், வளர்ச்சி தளங்கள் மற்றும் AI-ஆற்றல் கொண்ட செயலிகளை வழங்கும்.
யார் பயன்பெறுவார்கள்?
இந்த மையம் பெரிய நிறுவனங்கள், சிறு மற்றும் குறு வணிகங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மென்பொருள் உருவாக்குநர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு AI சேவைகளை வழங்கும்.
ஜியோ, இந்த ஜாம்நகர் கிளவுட் மையத்தை டெல்லி, மும்பை மற்றும் பிற முக்கிய மெட்ரோ நகரங்களுடன் ஃபைபர் நெட்வொர்க் வழியாக இணைக்கும்.
மெட்டாவுடனும் கைகோர்க்கும் ரிலையன்ஸ்
கூகுளுடனான இந்த அறிவிப்புடன், மெட்டா நிறுவனத்துடன் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை (JV) உருவாக்கப் போவதாகவும் ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. இந்த முயற்சியில் சுமார் ரூ. 855 கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது. எரிசக்தி, உற்பத்தி, ஊடகம், சில்லறை வர்த்தகம் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற துறைகளுக்கான லாமா (Llama) மாடல் அடிப்படையிலான நிறுவன தீர்வுகளை உருவாக்க இரு நிறுவனங்களும் AI துறையில் இணைந்து செயல்பட உள்ளன. இந்தத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.