Redmi 10A: குறைந்த விலையில் புது போன்... வெளியீட்டு தேதி அறிவித்த சியோமி..!

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 14, 2022, 09:51 AM IST
Redmi 10A: குறைந்த விலையில் புது போன்... வெளியீட்டு தேதி அறிவித்த சியோமி..!

சுருக்கம்

Redmi 10A: இத்துடன் முந்தைய மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே அம்சங்கள் புதிய ரெட்மி 10A ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டு உள்ளது.  

சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 10A ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி 9A ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். சியோமி வெளியிட்டு இருக்கும் தகவலின் படி இந்திய சந்தையில் புதிய ரெட்மி 10A ஸ்மார்ட்போன் ஏப்ரல் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

முன்னதாக ரெட்மி 10A ஸ்மார்ட்போன் மாடல் சீன சந்தையில் கடந்த மாதம் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரெட்மி 10A ஸ்மார்ட்போன் மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முந்தைய மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே அம்சங்கள் புதிய ரெட்மி 10A ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டு உள்ளது.

ரெட்மி 10A சிறப்பம்சங்கள்: 

- 6.53 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 IPS LCD டாட் டிராப் ஸ்கிரீன்
- 2GHz ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G25 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 4GB / 6GB LPDDR4x ரேம்
- 64GB / 128GB (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12.5
- 13MP பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ்
- 5MP செல்ஃபி கேமரா, f/2.2, ஃபேஸ் அன்லாக் 
- 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
- ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i coating) வசதி
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 5000mAh பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்

புதிய ரெட்மி 10A ஸ்மார்ட்போன் புளூ, பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெற இருக்கிறது. ஆன்வைன் மட்டும் இன்றி புதிய ரெட்மி 10A ஸ்மார்ட்போன் மாடல் Mi வலைதளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் நடைபெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை தேதி போன்ற விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கிறது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

டிவி ரூ.5,999 முதல்.. வாஷிங் மெஷின் ரூ.4,590 முதல்.. தாம்சன் பம்பர் தள்ளுபடி அறிவிப்பு
யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?