அசத்தல் அம்சங்கள்.. மிட் ரேன்ஜ் விலை.. புது ஒப்போ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்..!

By Kevin Kaarki  |  First Published Apr 13, 2022, 5:13 PM IST

ஒப்போ F21 ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், F21 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.


ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட F21 ப்ரோ மற்றும் ஒப்போ F21 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 6.43 இன்ச் AMOLED ஸ்கிரீன், F21 ப்ரோ மாடலில் 90Hz ஸ்கிரீன், 5ஜி மாடலில் 60Hz ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒப்போ F21 ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், F21 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இரு மாடல்களிலும் அதிகபட்சம் 8BG ரேம் , 5GB ரேம் எக்ஸ்பான்ஷன் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. ஒப்போ F21 ப்ரோ மாடலில் புகைப்படங்களை எடுக்க 64Mஜ பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 5ஜி மாடலில் 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டூயல் ரிங் ஃபுளோட்டிங் நோட்டிபிகேஷன் லைட் வழங்கப்பட்டு உள்ளது. ஒப்போ F21 ப்ரோ மாடலில் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

Latest Videos

undefined

ஒப்போ F21 ப்ரோ அம்சங்கள்:

- 6.43 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 90Hz AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 8GB LPDDR4x ரேம்
- 128GB UFS 2.2 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் கலர் ஓ.எஸ். 12.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 64MP பிரைமரி கேமரா, f/1.7, LED ஃபிளாஷ்
- 2MP மைக்ரோஸ்கோப் கேமரா, f/3.3
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 32MP செல்ஃபி கேமரா, f/2.4 
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 4500mAh பேட்டரி
- 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

ஒப்போ F21 ப்ரோ 5ஜி அம்சங்கள்:

- 6.43 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 60Hz AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
- அட்ரினோ 619 GPU
- 8GB LPDDR4x ரேம்
- 128GB UFS 2.2 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் கலர் ஓ.எஸ். 12.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 64MP பிரைமரி கேமரா, f/1.7, LED ஃபிளாஷ்
- 2MP மோனோகுரோம் கேமரா, f/2.4
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.4 
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 4500mAh பேட்டரி
- 33 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்

விலை விவரங்கள்:

ஒப்போ F21 ப்ரோ மாடல் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என்றும் ஒப்போ F21 ப்ரோ 5ஜி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒப்போ F21 ப்ரோ மாடல் விற்பனை ஏப்ரல் 15 ஆம் தேதியும், ஒப்போ F21 ப்ரோ 5ஜி மாடல் விற்பனை ஏப்ரல் 21 ஆம் தேதி துவங்க இருக்கிறது. 

click me!