Realme : பெரிய டிஸ்பிலே.. தரமான பேட்டரி லைஃப்.. Realme களமிறக்கும் புதிய பட்ஜெட் போன்கள் - Realme V60 & V60s!

By Ansgar R  |  First Published Jun 23, 2024, 6:21 PM IST

Realme V60 & V60s : Realme நிறுவனம் தனது இரு பபுதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இது அவர்களுடைய பட்ஜெட் செக்மென்ட் போன்களாகும்.


Realme V60 மற்றும் Realme V60s ஆகிய இரண்டு போன்களும் சீனாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 8 ஜிபி RAM என்ற வரை கொண்ட இந்த போன்களில், மீடியா டெக் டைமன்சிட்டி 6300 சிப்செட், சிங்கிள் 32 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 10Wல் சார்ஜ் செய்யக்கூடிய 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றை கொண்டுள்ளது. 

இந்த இரு கைபேசிகளும் Realme UI 5 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகின்றன, இது Android 14 ஐ அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. Realme V60 மற்றும் Realme V60s ஆகிய இரண்டு போன்களிலும் 8-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

வெற லெவல் கிரியேட்டிவிட்டி! ட்ரெண்டுக்கு ஏற்ப இசை அமைக்கும் AI மியூசிக் ஜெனரேட்டர்கள்!

Realme V60 போனை பொறுத்தவரை அதன் விலை 6ஜிபி RAM + 128ஜிபி ROM மாடல் தோராயமாக ரூ. 13,800 என்ற விலையில் விற்பனைக்கு வரும். அதே நேரத்தில் 8ஜிபி RAM + 256ஜிபி ROM மாடல் போன் தோராயமாக ரூ. 16,100 என்ற விலையில் விற்பனையாகும். இப்போதைக்கு இந்த போன் சீனாவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Realme V60 போலவே Realme V60s அதே விவரக்குறிப்புகளைக் கொண்டிருந்தாலும், இது சீனாவில் அதிக விலையில் விற்கப்படுகிறது. அதாவது Realme V60sக்கான விலை முறையே 6 GB RAM + 128GB ROM ரூ. 16,100க்கும் மற்றும் 8+256GB மாடல் ரூ. 20,700க்கும் விற்பனையாகிறது. இந்த போன் எப்போது இந்தியாவிற்கு வரும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

Realme V60 மற்றும் Realme V60s ஆகிய இரண்டும் இரட்டை சிம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஆகும், அவை ஆண்ட்ராய்டு 14 உடன் Realme UI 5 உடன் இயங்குகின்றன. அவை 6.67-இன்ச் HD+ (720x1,604 பிக்சல்கள்) LCD திரையை 625 nits இன் உச்ச பிரகாசத்துடன் கொண்டுள்ளது மற்றும் அதன் Refresh Rate 50Hz மற்றும் 120Hz வரை இருக்கும். ஸ்டார் கோல்ட் மற்றும் Turquoise Green வண்ணங்களில் இது கிடைக்கும்.

இனி உங்கள் மொபைல் நம்பரை யாருக்கும் தர தேவையில்லை.. வாட்ஸ்அப் கொடுத்த சூப்பர் அப்டேட்!

click me!