
Realme C63, இந்தியாவில் இந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஜூலை 1ம் தேதி திங்களன்று வெளியாகியுள்ளது. Realme நிறுவனத்தின் இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன், வீகன் லெதர் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதன் முக்கிய சிறப்பம்சமாகும். AI தொழில்நுட்பம் கொண்ட இந்த போனில் Air Gesture மற்றும் Rainwater Touch போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளது.
இந்த வார இறுதியில் இருந்து மக்களை இந்த போனை வாங்கிக்கொள்ளலாம். Realme C63 இந்தியாவில் 4GB RAM + 128GB ROM என்ற ஒரே ஒரு மாடலில் தான் அறிமுகமாகிறது. ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா இணையதளம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை கடைகள் வழியாக வரும் ஜூலை 3ம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும், இதன் விலை ரூபாய் 8,999 ஆகும்.
40 ஆயிரம் ரூபாய் போன்.. இப்போது ரூ.27 ஆயிரம் மட்டுமே.. OnePlus 11R வாங்க அருமையான சான்ஸ்..
Realme C63 ஃபோன், ஜேட் கிரீன் மற்றும் லெதர் ப்ளூ என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. Realme C63 ஆனது Air Gesture போன்ற AI-ஆதரவு அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது பயனர்களை திரையைத் தொடாமல் கைபேசியை இயக்க அனுமதிக்கிறது. அதே போல ஈரமான கைகளாலும் திரையைப் பயன்படுத்த அனுமதிக்கும் "ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச்" அம்சத்தையும் இது கொண்டுள்ளது.
வாட்டர் ட்ரோப் ஹோல் கொண்ட இந்த கைபேசியில் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு மணிநேரம் வரை "பேசும்" நேரத்தை இது வழங்குவதாகக் கூறப்படுகிறது. Realme C63ன் இந்த இந்திய பதிப்பின் விரிவான ஸ்பெசிபிகேஷன்ஸ் குறித்த தகவலை Realme இன்னும் வெளியிடவில்லை.
மொபைல் கட்டண உயர்வைத் தவிர்க்க.. இந்த '4 நாள்' ட்ரிக்கை பயன்படுத்துங்க.. நோட் பண்ணுங்க!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.