அதிரடியான லான்ச் ஆஃபர்களுடன் அறிமுகமான ரியல்மி 9 ப்ரோ சீரிஸ்

By Kevin Kaarki  |  First Published Feb 16, 2022, 3:56 PM IST

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 9 ப்ரோ மற்றும் 9 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.


ரியல்மி 9 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் என அழைக்கப்படும் இரு மாடல்களும் அந்நிறுவனத்தின் ரியல்மி 8 ப்ரோ சீரிஸ் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இது 108MP பிரைமரி கேமரா கொண்ட முதல் ரியல்மி ஸ்மார்ட்போன் எனும் பெருமையுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 9 ப்ரோ மாடலில் 6.59 இன்ச் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, IPS LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், FHD+ ரெசல்யூஷன் மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க ரியல்மி 9 ப்ரோ மாடலில் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2 MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் வலதுபுறம் பவர் பட்டனுடன் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 6GB / 8GB LPDDR4x ரேம், 128GB UFS 2.2 மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஒ.எஸ். சார்ந்த ரியல்மி யு.ஐ. 3.0 கொண்டிருக்கிறது.

ரியல்மி 9 ப்ரோ பிளஸ் அம்சங்கள்

இந்த மாடலில் 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் OIS வசதியும் உள்ளது.

ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8GB LPDDR4x ரேம், 128GB / 256GB UFS 2.2 மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 60 வாட் ரேபிட் சார்ஜிங் வசதி உள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யு.ஐ. 3.0, டூயல் ஸ்பீக்கர்கள், 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை மற்றும் விற்பனை விவரம்

ரியல்மி 9 ப்ரோ 6GB + 128GB ரூ. 17,999 
ரியல்மி 9 ப்ரோ 8GB + 128GB ரூ. 20,999

ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 6GB + 128GB ரூ. 24,999
ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 8GB + 128GB ரூ. 26,999
ரியல்மி 9 ப்ரோ பிளஸ் 8GB + 256GB ரூ. 29,999

புதிய ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் பிளாக், சன்ரைஸ் புளூ மற்றும் அரோரா கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடலின் விற்பனை பிப்ரவரி 21 ஆம் ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளத்தில் துவங்குகிறது. ரியல்மி 9 ப்ரோ மாடலின் விற்பனை பிப்ரவரி 23 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளத்தில் துவங்குகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் ஆன்லைன் மட்டுமின்றி ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் கிடைக்கும். 

click me!