பிளேஃபிட் டையல் மற்றும் பிளேஃபிட் XL ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
பிளேஃபிட் டையல் மற்றும் பிளேஃபிட் XL ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் அழைப்புகளை தங்களின் மணிக்கட்டில் இருந்தபடி நேரடியாக மேற்கொள்ள முடியும். புதிய பிளேஃபிட் டையல் மற்றும் பிளேஃபிட் XL ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கின்றன.
இரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களிலும் பல்வேறு ஸ்போர்ட் மோட்கள், வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றை பிளேஃபிட் ஆப் மூலம் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். பிளேஃபிட் டையல் மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட 1.75 இன்ச் IPS தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, பிளேஃபிட் XL மாடலில் 1.69 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல்களின் ஸ்டிராப்கள் சிலிகான் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் உள்ள டிஸ்ப்ளேவை நேரடி சூரிய வெளிச்சத்திலும் தெளிவாக பயன்படுத்த முடியும். இரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களிலும் பக்கவாட்டில் பட்டன் ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு நேவிகேஷன் மற்றும் வாட்ச் ஃபேஸ்களை இயக்க முடியும். பிளேஃபிட் டையல் மற்றும் பிளேஃபிட் XL ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை ஸ்மார்ட்போனுடன் இணைத்து கொண்டு நோட்டிஃபிகேஷன்களை பெற முடியும்.
இத்துடன் மியூசிக் பிளேபேக், கேமரா அம்சங்களை இயக்க முடியும். பிளேஃபிட் டையல் மாடலில் ப்ளூடூத் வி5 கனெக்டிவிட்டி, IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, பிளேஃபிட் XL மாடலில் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரு மாடல்களிலும் ஸ்போர்ட் ஹெல்த் டிராக்கிங் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிளேஃபிட் டையல் மாடலில் blood-oxygen saturation மாணிட்டர் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வசதி பிளேஃபிட் XL மாடலில் இல்லை.
இரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களிலும் நோட்டிஃபிகேஷன் அலெர்ட்கள் உள்ளன. இத்துடன் இன்கமிங் அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் இமெயில்களுக்கு வைப்ரேஷன் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. பிளேஃபிட் டையல் மாடலில் 210mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் ஐந்து நாட்களுக்கான ரன்டைம், 30 நாட்களுக்கான ஸ்டாண்ட்பை வழங்குகிறது. பிளேஃபிட் XL மாடலை முழு சார்ஜ் செய்தால் 15 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
விலை விவரங்கள்
பிளேஃபிட் டையல் ஸ்மார்ட்வாட்ச் விலை இந்தியாவில் ரூ. 3,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது. பிளேஃபிட் XL மாடலின் விலை ரூ. 2,999 ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்டீல் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இரு மாடல்களும் பிளே, ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.