ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஸ் Q2s விலை மற்றும் இதர விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் மற்றொரு குறைந்க விலை ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரியல்மி பட்ஸ் Q2s என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் முதற்கட்டமாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அங்கு இந்த இயர்பட்ஸ் விலை 29 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 2500 என நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது.
மேலும் இந்த இயர்பட்ஸ் நைட் பிளாக், பேப்பர் கிரீன் மற்றும் பேபர் வைட் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய சந்தையை தொடர்ந்து ரியல்மி பட்ஸ் Q2s இம்மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
ரியல்மி பட்ஸ் Q2s இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், சமீபத்தில் ரியல்மி பட்ஸ் Q2s விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருந்ததால், விரைவில் இதன் இந்திய வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
அம்சங்களை பொருத்தவரை புதிய ரியல்மி பட்ஸ் Q2s மாடலில் ரியல்மி பட்ஸ் Q2 மாடலில் வழங்கப்பட்ட அம்சங்களே இடம்பெறும் என தெரிகிறது. ரியல்மி பட்ஸ் Q2 மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், அதிகபட்சம் 28 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப், யு.எஸ்.பி. டைப் சி போர்ட், IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.