Realme 11 Pro+ 5G: அட்டகாசம்! அமர்க்களம்! விடா முயற்சியோடு வந்த Realme 11 Pro+ - எப்படி இருக்கு?

By Raghupati R  |  First Published Jun 16, 2023, 12:56 PM IST

ரியல்மி 11 ப்ளஸ் ப்ரோ (Realme 11 Pro+) நேற்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்.


Realme 11 Pro+ விற்பனை இந்தியாவில் நேற்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. Realme இன் மிகவும் பிரபலமான தொலைபேசி 200 MP கேமரா, 100W வேகமான சார்ஜிங் ஆதரவு மற்றும் பலவற்றுடன் வருகிறது. இதன் 8 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியண்ட் விலை இந்தியாவில் ரூ.27,999 மற்றும் 12 ஜிபி, 256 ஜிபி மாடல் ரூ.29,999 ஆகும்.

எங்கே வாங்க வேண்டும்?

Tap to resize

Latest Videos

undefined

இந்த ஸ்மார்ட்போன் ரியல்மியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும். இந்த மொபைலை வாங்க விரும்புவர்கள் மேற்கண்டவற்றின் மூலமாக வாங்கலாம்.

தள்ளுபடி

இந்த ஸ்மார்ட்போனின் விலை மேலும் குறைக்கப்படலாம். HDFC வங்கி மற்றும் ICICI வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ரூ.2000 வரை தள்ளுபடி பெறலாம்.

சிறப்பம்சங்கள்

Realme 11 Pro+ ஆனது 6.7-inch FHD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 120 Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும்  MediaTek Dimensity 7050 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. Realme 11 Pro+ ஆனது Android 13 இயங்குதளம் மூலம் இயங்குகிறது. மேலும், இது 12 GB ரேம் மற்றும் 1 TB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போன் 200 எம்பி முதன்மை கேமரா சென்சார், 8 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் உள்ளடக்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபி மற்றும் வீடியோ சாட் செய்ய 32 எம்பி முன்பக்க கேமரா உள்ளது. Realme 11 Pro+ ஆனது 100W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும். 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

புது போன் வாங்க போறீங்களா.. ஆல் ஏரியாவில் பட்டையை கிளப்பும் Nothing Phone 2 வரப்போகுது !!

BYPASS சார்ஜிங்.! ஜேபிஎல் ஸ்பீக்கர்கள்.! குறைந்த விலையில் மாஸ் காட்டும் Infinix Note 30 5G ஸ்மார்ட்போன்

click me!