Flipkart பிக் பில்லியன் டே மூலம் Poco M5 விற்பனை ஆரம்பம்!

By Dinesh TG  |  First Published Sep 13, 2022, 12:50 PM IST

போகோ நிறுவனத்தின் M5 ஸ்மார்ட்போன் இன்று மதியம் 1 மணிக்கு ஃபிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.


ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி இடத்தில் போகோ நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த Poco M5 ஸ்மார்ட்போனானது குறைந்த விலையில், அதிகப்படியான அம்சங்களை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போகோ எம்5 ஸ்மார்ட்போன் தற்போது ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. 

அதன்படி, போகோ எம்5 ஸ்மார்ட்போனில் மொத்தம் இரண்டு வகையான வேரியண்டுகளில் உள்ளது.4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என்ற வேரியண்டும், 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என்ற வேரியண்டும் உள்ளது. இதன் விலை முறையே 12,499 ரூபாய், 14,499 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

6.58 இன்ச் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி திரை, 90Hz வரையிலான வேரியபிள் ரெவ்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும், மீடியாடெக் ஹீலியோ ஜி99 SoC பிராசசர் இருப்பதால், விலைக்கு ஏற்ற செயல்திறன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பக்கத்தில் மூன்று கேமரா, முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கொண்ட் செல்பி கேமரா, 5000 mAh சக்தி கொண்ட பேட்டரி, ப்ளூடூத், இன்ப்ரா ரெட் பிளாஸ்டர், டைப் சி கேபிள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஐசி புளூ, போகோ மஞ்சள், பவர் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கின்றன. ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத சிறப்பு தள்ளுபடி ஆஃபர் வழங்கப்படுகிறது. 

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை: "மின்கட்டணம் பாக்கி” என்ற SMS மூலம் பணம் பறிக்கும் கும்பல்

அமேசானுக்குப் போட்டியாக பிளிப்கார்ட் தரப்பில் தற்போது பிக் பில்லியன் டே என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒப்போ, இன்பினிக்ஸ், மோட்டோ, ரியல்மி உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!