ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்குச் செல்லும் 4 பேர் யார்? கேரளாவில் அறிமுகப்படுத்திய பிரதமர் மோடி!

By SG Balan  |  First Published Feb 27, 2024, 12:44 PM IST

குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் இஸ்ரோ சார்பில் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர்.


மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிப் பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்த இருக்கிறார். கேரளாவில் நடைபெற்ற இஸ்ரோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நான்கு விண்வெளி வீரர்களையும் சந்தித்து வாழ்த்து கூறி உரையாடினார்.

இஸ்ரோ சார்பில் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளிக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 இந்திய விண்வெளி வீரர்களின் விவரம்: 1. குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், 2. குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், 3. குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், 4. விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா.

Tap to resize

Latest Videos

ககன்யான் திட்டம், பூமியில் இருந்து சுமார் 400 கிமீ தாழ்வான பூமியின் சுற்றுவட்டப்பாதையில் 3 நாட்கள் பணிக்காக 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரை அனுப்புவதை நோக்கமாகக்  கொண்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

39 நாணயங்கள், 37 காந்தங்களை விழுங்கிய நபர்! பாடி பில்டிங் ஆசையால் நடந்த விபரீதம்!

INDIA, Let's meet our astronauts for the 's program. pic.twitter.com/0U7J3O7J7l

— ISRO InSight (@ISROSight)

விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் ஆய்வுகளை முடித்ததும், கடலில் தரையிறங்கி பாதுகாப்பாக பூமிக்குக் அழைத்துவரப்படுவார்கள். இத்திட்டத்தின் மூலம் இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திறனை முதல் முறையாக நிகழ்த்திக் காட்ட உள்ளது.

ககன்யானுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து விண்வெளி வீரர்களும் குரூப் கேப்டன் மற்றும் விங் கமாண்டர் நிலைகளில் உள்ள விமானிகளாக இருபதால் அவர்கள் விண்வெளி மற்றும் விமானத் துறையில் ஆழ்ந்த அனுபவமும் அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இஸ்ரோ முதல் முறை மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்காக பல ஆய்வுகளைச் செய்து வருகிறது. பெங்களூரில் செப்டம்பர் 2019 இல் இத்திட்டத்திற்கான முதல் நிலை பயற்சிகள் முடிந்த பின்பு, 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய விமானப்படையின் கீழ் வரும் ஏரோஸ்பேஸ் மெடிசின் நிறுவனத்தில் தேர்வு நடைபெற்றது. பல சுற்று தேர்வுகளுக்குப் பிறகு, இறுதியாக நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இஸ்ரோ நான்கு பேரையும் ஆரம்பப் பயிற்சிக்காக ரஷ்யாவிற்கு அனுப்பியது. கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக பயிற்சியில் சிறிது தாமதம் ஏற்பட்டது. 2021 இல் அந்தப் பயிற்சி முடிக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றுக்கொன்று சவால் விடும் சூப்பர் பவர்... செம ஸ்பீடு... ரூ.2.5 லட்சத்திற்குள் கிடைக்கும் பெஸ்டு பைக் எது?

click me!