ஆண்ட்ராய்டு 13.. அசத்தலான Snapdragon Processor.. வெளியான Oppo Find N3 - விலை என்ன தெரியுமா? Full Spec இதோ!

By Ansgar R  |  First Published Oct 19, 2023, 5:13 PM IST

Oppo Find N3 : சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரிடமிருந்து அண்மையில் புத்தக-பாணியில் மடிக்கக்கூடிய போன்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றது. அந்த வகையில் வியாழக்கிழமை அன்று ஒரு புதிய ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன், கடந்த ஆண்டு Oppo நிறுவனம் வெளியிட்ட Find N2வின் ஒரு Upgrade வெர்சன் என்றே கூறலாம். 


Oppo Find N3, இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 SoCல் இயங்குகிறது, OpenPlus நிறுவனம் தனது Open என்ற போனை வெளியிட இருக்கும் அதே நாளான இன்று, Oppo Find N3 அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலே குறிப்பிட்ட இந்த இரு ஸ்மார்ட்போன்களும் இரு நிறுவனங்களாலும் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Oppo Find N3 என்ற இந்த புதிய மடக்கக்கூடிய போன், மடக்கும் இடத்தில் Flexion hinge என்ற அம்சத்தை கொண்டுள்ளது, இது சுமார் 1,000,000 முறை மடக்கி சோதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

Latest Videos

undefined

10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் இதுதான்.. என்னென்ன மொபைல்கள் தெரியுமா?

இந்த போனின் விலை என்ன?

Oppo Find N3, 16GB + 256GB என்ற ஒரே ஒரு வெர்சனில் தான் அறிமுகமாகியுள்ளது, SGD அதுவது சிங்கப்பூர் டாலர் மதிப்பில் சுமார் 2,399க்கு விற்பனைக்கு வரவுள்ளது (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ. 1,45,300) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஷாம்பெயின் கோல்டு மற்றும் கிளாசிக் கருப்பு வண்ண நிறங்களில் வருகிறது. நாளை அக்டோபர் 20 முதல் சிங்கப்பூரில் முன்கூட்டிய ஆர்டருக்குக் இது கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Oppo Find N3 Specifications 

இரட்டை சிம் (நானோ) வசதியுள்ள இந்த Oppo Find N3 ஆனது ஆண்ட்ராய்டு 13ல் ColorOS 13 உடன் இயங்குகிறது. இது 426ppi Pixcel Density மற்றும் 120Hz டைனமிக் Fresh Rateடுடன் கூடிய பெரிய 7.82-இன்ச் 2K (2,268 x 2,440 பிக்சல்கள்) LTPO 3.0 AMOLED திரையைக் கொண்டுள்ளது. உள் திரையானது 240Hz வரையிலான Touch Response  ரேட் மற்றும், 2,800 nits வரை Peak Brightness சப்போர்ட் செய்கின்றது. மேலும் இதன் டிஸ்ப்ளே அல்ட்ரா-தின் கிளாஸ் (UTG) பாதுகாப்பைக் கொண்டுள்ளது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 6.31-இன்ச் 2K (1,116x2,484 பிக்சல்கள்) AMOLED திரையுடன், 120Hz Fresh Rate மற்றும் 431ppi Pixcel Density அடர்த்தி கொண்ட கவர் திரையும் உள்ளது.

Oppo ஆனது Qualcomm இன் octa-core Snapdragon 8 Gen 2 SoC உடன் Adreno 740 GPU உடன் இந்த புதிய Find N3ஐ உருவாகியுள்ளது. இது 16GB வரையிலான LPDDR5X RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. Oppoன் இந்த மடிக்கக்கூடிய ஃபோனும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது, மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சத்தையும் இது சப்போர்ட் செய்கின்றது. ஃபோனில் உள்ள ரிங், மியூட் மற்றும் சைலண்ட் மோட்களைக் கட்டுப்படுத்த OnePlusன் ட்ரை-ஸ்டேட் அலர்ட் ஸ்லைடர் இதில் உள்ளது இதன் சிறப்பு அம்சமாகும். Oppo Find N3 ஆனது 67W SuperVOOC 2.0 ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டது. இதில் 4,805mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

எல்லாரும் ரெடியா?.. Count Downஐ துவங்கிய OnePlus.. அறிமுகமாகும் "Open".. விலை என்ன? பல சுவாரசிய தகவல்கள் இதோ!

click me!