சீனாவில் Oppo A1 Pro 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு இந்த ஸ்மார்ட்போன் எப்போது வரும், இதன் விலை மற்றும் சிறப்பம்சஙகள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
சீனாவில் ஓப்போ நிறுவனத்தின் A சீரிஸில் புதிதாக Oppo A1 Pro 5G அறிமுகமானது. இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் முழு-எச்டி+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695 SoC பிராசசர் உள்ளது. பின்புறத்தில் 108 மெகாபிக்சல் பிரைமரியுடன் கூடிய டூயல் கேமரா அமைப்புடன் உள்ளது.
முன்பக்கத்தில் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவும், அதில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன், அதற்கு ஏற்ப 4800mAh பேட்டரி கொண்டுள்ளது. இது 12ஜிபி வரை ரேம் மற்றும் மூன்று வெவ்வேறு நிறங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Oppo A1 Pro 5G ஸ்மார்ட்போனின் விலை:
8GB ரேம் + 128GB மெமரி கொண்ட Oppo A1 Pro 5G ஸ்மார்ட்போனின் விலை சீனாவில் CNY 1,799 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 20,600) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை CNY 1,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 23,000) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் மூன்று நிறங்களில் கிடைக்கின்றன. அவை Dawn Gold, Moon Sea Black மற்றும் Zhaoyu Blue ஆகும். இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 25 முதல் விற்பனைக்கு வரும் என்றும், தற்போது இதற்கான முன்பதிவு நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் Oppo A1 Pro 5G எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஸ்லிம்மான டிசைனில் நவ.16 தேதி அறிமுகமாகும் OPPO A1 Pro ஸ்மார்ட்போன்!
Oppo A1 Pro 5G சிறப்பம்சங்கள்:
கூடுதல் சிறப்பம்சங்கள்: 5G, 4G LTE, Wi-Fi 5, ப்ளூடூத் v5.1, GPS/ A-GPS, USB டைப்-C போர்ட்
சென்சார்கள்:ஜியோமேக்னடிக் சென்சார், சுற்றுப்புற ஒளி சென்சார், ஆக்ஸிலேட்டர் சென்சார், கிராவிட்டி சென்சார், கைரோஸ்கோப் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்
பேட்டரி: 4,800mAh பேட்டரி,
சார்ஜர்: 67W ஸ்பீடு சார்ஜர்
ஸ்மார்ட்போன் அளவு: 7.7 மிமீ தடிமன் மற்றும் 171 கிராம் எடை