வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான Youtube மூலமாகவும் இனி ஷாப்பிங் செய்யும் வசதி விரைவில் வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
உலகளவில் வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தில் முன்னனி இடத்தில் யூடியூப் இருந்து வருகிறது. மேலும், டிக் டாக்கை போல் யூடியூப்பிலும் ஷார்ட்ஸ் வீடியோ வசதி கொண்டு வரப்பட்டு, அதற்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டிக் டாக்கை போல், யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனிடையே கூகுள் நிறுவனம் தனது வருவாயைப் பெருக்கும் வகையில் விளம்பரங்களின் எண்ணிக்கையை உயர்த்தியது.
இந்த நிலையில், யூடியூப்பில் விளம்பரங்களோடு சேர்த்து யூடியூப்பிலேயே ஷாப்பிங் செய்யும் வசதியை கொண்டுவரப்பட உள்ளது. இந்த அம்சம், அமெரிக்காவில் ளஉள்ள தகுதியான படைப்பாளர்களிடம் சோதனை செய்யப்படுகிறது, அவர்களது சொந்த ஸ்டோர்களை அதில் டேக் செய்யும் வகையில் உருவாக்கியுள்ளது.
"அமெரிக்கா, இந்தியா, பிரேசில், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பார்வையாளர்கள் அந்த டேக்குகளைப் பார்க்கலாம், அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம், மேலும் இவ்வாறு டேக் குறிப்பிடும் வசதியை அதிகமான படைப்பாளர்களுக்கும், இன்னும் அதிகமான பகுதிகளில் உள்ளவர்களுக்கும் விரைவில் வருவோம்" என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
Amazon, Flipkartக்கு போட்டியாக Tata Croma தளத்தில் ஆஃபர்கள் அறிவிப்பு!
வீடியோக்களில் உள்ள இணைப்புகள் மூலம் தயாரிப்புகளை விற்பவர்களுக்கான புதிய கமிஷன் திட்டங்களை யூடியூப் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. ஷார்ட்ஸ் வீடியோக்களில் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழியை YouTube வெளியிட்ட சில மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தன.
அதன் பிறகு, அதன் வீடியோ அம்சமான Shorts இல் விளம்பரங்களை அறிமுகப்படுத்தியது. ஷார்ட்ஸ் வீடியோ படைப்பாளர்களுக்கு வருவாயில் சுமார் 45% வழங்குகிறது. இருப்பினும் டிக் டாக் அமலில் இருக்கும் பிற நாடுகளில், யூடியூப்பைக் காட்டிலும் டிக்-டாக்கின் முன்னனி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.