ஓபன்சிக்னல் ரிப்போர்ட் 2021: சிறந்த வீடியோ, கேம் மற்றும் வாய்ஸ் ஆப் அனுபவத்தை வழங்குவதில் ஏர்டெல் முதலிடம்

By karthikeyan V  |  First Published Apr 20, 2021, 3:21 PM IST

சிறந்த வீடியோ, வாய்ஸ் ஆப், கேமிங் ஆகியவற்றில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்குவதில் ஏர்டெல் தான் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
 


கடந்த பத்தாண்டுகளில் டெலிகாம் துறை அதீத வளர்ச்சியடைந்துள்ளது. 3ஜி மற்றும் 4ஜி இண்டர்நெட் வந்தபின்னர், கம்ப்யூட்டர்களில் செய்யும் அனைத்து வேலைகளையும் மொபைல்களிலேயே செய்துவிடமுடிகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அனைத்துமே தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கிவருகிறது. 

அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் நல்ல சேவையை வழங்கினாலும், அவற்றில் ஒன்று கண்டிப்பாக முதலிடத்தில் இருக்க வேண்டு அல்லவா? அது எந்த டெலிகாம் நிறுவனம் என்று தெரிந்துகொள்ள ஓபன்சிக்னல் வாடிக்கையாளர்களிடம், அவர்களின் மொபைல் அனுபவம் குறித்து பல கேள்விகளை கேட்டு, அதற்கான பதில்களிலிருந்து டாப் நிறுவனம் எதுவென்று தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

ஓபன் சிக்னல் தினமும் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை தினமும் நெட்வொர்க் மற்றும் செயல்திறன் அளவீடுகளை வைத்து ஆராய்ந்து, அவற்றை தொகுத்து, வெவ்வேறு அளவுருக்களின் அடிப்படையில் முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஓபன்சிக்னல் 2021 மார்ச் ரிப்போர்ட்டின் படி, வீடியோ, வாய்ஸ் ஆப், கேமிங் ஆகியவற்றில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்குவதில் ஏர்டெல் தான் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

வீடியோ அனுபவம்:

கடைசி காலாண்டில் ஏர்டெல் சிறந்த வீடியோ அனுபவத்தை வழங்கியதில் கூடுதலாக 2.8 பாயிண்ட்டுகளை பெற்றிருப்பதாக ரிப்போர்ட் தெரிவிக்கிறது. ஆன்லைனில் சிறிய வீடியோக்களை அதிகம் பார்ப்பது வாடிக்கையாளர்களின் வாடிக்கையாக உள்ளது. நம் நாட்டில், யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ஓடிடி ஆகியவற்றில் தான் 50% மொபைல் டேட்டா பயன்படுத்தப்படுகிறது. நல்ல வீடியோ அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. அந்தவகையில், வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த வீடியோ அனுபவத்தை வழங்குவதில் ஏர்டெல் தான் முதலிடத்தில் உள்ளது.

கேம் அனுபவம்:

கேம் ஆடுவது, மொபைல் பயன்பாட்டாளர்களின் வாடிக்கையான ஒரு விஷயமாகிவிட்டது. அந்தவகையில் சிறந்த கேம் அனுபவத்தை வழங்கும் டெலிகாம் நிறுவனம் எது என்பது குறித்து வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்டது ஓபன் சிக்னல். அதிலும் ஏர்டெல் தான் முதலிடத்தில் உள்ளது. 58.5 புள்ளிகளுடன், சிறந்த கேம் அனுபவத்தை வழங்குவதிலும் ஏர்டெல் தான் முதலிடத்தில் உள்ளது. ஆன்லைன் கேம் ஆடுவதற்கு அதிவேக இண்டர்நெட் அவசியம். அதை ஏர்டெல் தான் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. எனவே தான் இதிலும் ஏர்டெல் முதலிடத்தை பிடித்துள்ளது.

வாய்ஸ் ஆப் அனுபவம்:

வாய்ஸ் ஆப் அனுபவத்தை கேட்பதன் மூலம் ஃபோன் கால்களின் தரத்தை ஆராய்ந்தது ஓபன் சிக்னல். வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசேன்ஜெர், ஸ்கைப் ஆகியவற்றை பயன்படுத்தும்போது சிறந்த சேவையை எந்த டெலிகாம் நிறுவனம் வழங்குகிறது என்பதை ஆராய்ந்தபோது, 77.8 புள்ளிகளுடன் அதிலும் ஏர்டெல்லே முதலிடத்தை பிடித்தது. கடந்த காலாண்டை ஒப்பிடும்போது இந்த 2.3 புள்ளிகளை கூடுதலாக பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது ஏர்டெல்.

உங்கள் நெட்வொர்க் மோசமாக இருப்பதால், வேறொரு நெட்வொர்க்கிற்கு மாறும் முனைப்பில் இருப்பவர்களுக்கு, எந்த நெட்வொர்க்கிற்கு மாற வேண்டும் என்பதை முடிவு செய்ய கண்டிப்பாக மேற்கூறிய விவரங்கள் உதவிகரமாக இருக்கும்.
 

click me!