ஏவுகணை வலிமையில் கர்ஜிக்கும் இந்தியா... அதிர்ச்சியில் சீனா- பாகிஸ்தான்..!

By Thiraviaraj RM  |  First Published Nov 28, 2020, 5:51 PM IST

இந்தியா கடந்த சில நாட்களாக பல வகையான ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. ஏவுகணை சக்தியை அடைவதில் இந்தியா ராஜாவாகி வருவதால்  சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.


இந்தியா கடந்த சில நாட்களாக பல வகையான ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. ஏவுகணை சக்தியை அடைவதில் இந்தியா ராஜாவாகி வருவதால்  சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.


 
இந்தியாவின் இந்த பலத்தால், சீனா மற்றும் பாகிஸ்தானின் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியா இன்று அனைத்து வகையான நவீன ஏவுகணை சக்திகளையும் கொண்டுள்ளது. இந்தியா தனது ஏவுகணையால் ஐரோப்பாவின் நாடுகளை குறிவைக்க முடியும், அதே நேரத்தில் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களையும் கொல்ல முடியும்.

Latest Videos

undefined

இந்தியாவில் கடல், வானம் மற்றும் நிலத்திலிருந்து அணுசக்தி தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளும் உள்ளன. இந்த வகையான வலிமையைக் கொண்ட உலகின் நான்காவது நாடு இந்தியா. இந்தியாவின் இந்த சக்தி இந்தியாவின் எதிரிகளின் தொல்லைகளை அதிகரித்துள்ளது.

அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு இந்தியா புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளது என்பது தான் கூடுதல் சிறப்பு.. இந்தியாவின் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களும் மிக விரைவில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்க முடியும். இது இந்தியாவின் வலிமையை இன்னும் அதிகரிக்கும்.

click me!