OnePlus Ace 3V மார்ச் 21 அன்று வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த கைபேசியின் வடிவமைப்பு, வண்ண விருப்பங்கள் மற்றும் சில முக்கிய விவரக்குறிப்புகள் பற்றி தகவல்கள் இப்பொது இணையத்தில் கசிந்துள்ளது.
பிரபல OnePlus நிறுவனம் தனது புதிய OnePlus Ace 3V என்ற போனை வருகின்ற மார்ச் 21ம் தேதி சீனாவில் வெளியிட உள்ளது. மேலும் இவ்வாண்டு இறுதிக்குள் இந்த போன் இந்திய சந்தையிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் 2023ல் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Ace 2Vன் ஒரு புதுப்பிக்கப்பட்ட டிசைன் தான் இது.
OnePlus Ace 3Vன், 12GB + 256GB வேரியண்ட் தோராயமாக இந்திய மதிப்பில் சுமார் 26,500க்கும், அதே நேரத்தில் 12GB + 512GB மற்றும் 16GB + 512GB வகைகள் தோராயமாக, ரூ. 35,000 என்ற விலையிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் இது எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.
undefined
முன்னதாக, OnePlus Ace 3V ஆனது 16GB LPDDR5x ரேம் மற்றும் 512GB UFS 4.0 உள் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்ட Snapdragon 7+ Gen 3 SoC மூலம் இயக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டது. இது மேஜிக் பர்பில் சில்வர் மற்றும் டைட்டானியம் கிரே நிறங்களில் வழங்கப்படும் மற்றும் ரிங் போன்ற LED ஃபிளாஷ் யூனிட்டுடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
மேலும் OnePlus Ace 3V ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் ProXDR ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி முதன்மை பின்புற சென்சார் கொண்டிருக்கும். மேலும் IP65 வரை திறன் கொண்டதாக வர உள்ளது. மேலும் இது ColorOSஐ கொண்டு இயக்கும் மற்றும் OnePlus மூன்று வருட மென்பொருள் மேம்படுத்தல்கள் மற்றும் நான்கு வருட Safety Updates வழங்குவதாக உறுதியளிக்கிறது OnePlus.
தொழிலதிபரை சிப்ஸ் கொடுத்து ஏமாற்றிய ஸ்டெஃப் மிஸ்! ரூ.95 லட்சத்தை அபேஸ் செய்த விர்சுவல் தோழி!