ஒன்பிளஸ் 9 5ஜி மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், ஹேசில்பிலாடு கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஒன்பிளஸ் நிறுவனம் நாளை (மார்ச் 31) இந்திய சந்தையில் தனது ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 9 5ஜி மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி மாடல்களின் விலையை இந்திய சந்தையில் அதிரடியாக குறைத்து இருக்கிறது. புதிய அறிவிப்பின் படி ஒன்பிளஸ் 9 5ஜி மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி மாடல்களின் விலை ரூ. 5 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது.
பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்கள்:
undefined
அறிமுகம் செய்யப்படும் போது ஒன்பிளஸ் 9 5ஜி மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி மாடல்கள் பிரீமியம் ஸ்மார்ட்போன்களாக இருந்தன. இவற்றில் ஹேசில்பிலாடு கேமரா சென்சார் உள்பட ஏராளமான தலைசிறந்த அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தன. தற்போது ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி மாடல் இதை விட அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் ஒன்பிளஸ் 9 5ஜி மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி மாடல்களின் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸ் வலைதளம்:
ஒன்பிளஸ் 9 5ஜி மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி மாடல்களின் புதிய விலை ஏற்கனவே ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. அதன்படி ஒன்பிளஸ் 9 5ஜி பேஸ் வேரியண்ட் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்றும் மாறி இருக்கின்றன. முன்னதாக இவற்றின் விலை முறையே ரூ. 49 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 54 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி மாடல் பேஸ் வேரியண்ட் விலை தற்போது ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 64 ஆயிரத்து 999 என்றும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களும் முன்னதாக முறையே ரூ. 64 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 69 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
அம்சங்கள்:
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 9 5ஜி மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், ஹேசில்பிலாடு கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இரு மாடல்களும் அசத்தலான பேட்டரி பேக்கப், சிறப்பான டிஸ்ப்ளே மற்றும் ஸ்டைலிஷ் டிசைன் கொண்டிருக்கின்றன.