இவ்வளவு தானா? மிக குறைந்த விலை ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.. போட் அதிரடி..!

By Kevin Kaarki  |  First Published Mar 30, 2022, 4:53 PM IST

இதன் வெளியீடு பற்றிய டீசர் அமேசான் தளத்தில் இடம்பெற்று இருந்த நிலையில், தற்போது இதன் அம்சங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.


இந்தியாவை சேர்ந்த முன்னணி அக்சஸரீ பிராண்டான போட் புதிதாக ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் போட் வேவ் லைட் என அழைக்கப்படுகிறது. முன்னதாக இதன் வெளியீடு பற்றிய டீசர் அமேசான் தளத்தில் இடம்பெற்று இருந்த நிலையில், தற்போது இதன் அம்சங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

அம்சங்களின் படி புதிய போட் வேவ் லைட் மாடலில் 1.69 இன்ச் சதுரங்க வடிவம் கொண்ட டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், SpO2 டிராக்கிங், இதய துடிப்பு சென்சார், ஸ்லீப் டிராக்கர் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய போட் வேவ் லைட் மாடல் கூகுள் ஃபிட் மற்றும் ஆப்பிள் ஹெல்த் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

Tap to resize

Latest Videos

இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொண்டால், ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் மியூசிக் பிளே லிஸ்ட் உள்ளிட்ட அம்சங்களை வாட்ச் கொண்டே இயக்க முடியும். மேலும் IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. 

போட் வேவ் லைட் சிறப்பம்சங்கள்:

- 1.69 இன்ச் டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ்
- எடை: 44.8 கிராம்
- யு.ஐ. அம்சங்களை இயக்க சுழலும் கிரவுன்
- இதய துடிப்பு சென்சார், SpO2 டிராக்கர்
- ஸ்லீப் டிராக்கர்
- ஸ்போர்ட்ஸ் மோட்கள் 
- போட் அணியக்கூடிய செயலியில் இருந்து 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்
- ஏழு நாட்களுக்கான பேட்டரி பேக்கப்
- கால், டெக்ஸ்ட், சமூக வலைதள சேவைகளுக்கான நோட்டிஃபிகேஷன்
- மியூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல் வசதி
- கூகுள் ஃபிட்
- ஆப்பிள் ஹெல்த் 

போட் வேவ் லைட் விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

இந்திய சந்தையில் புதிய போட் வேவ் லைட் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நாளை (மார்ச் 31) மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. புகிய போட் வேவ் லைட் ஸ்மார்ட்வாட்ச் பிளாக், புளூ மற்றும் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

click me!