
அமேசான் பிளாக் ஃபிரைடே விற்பனை தொடங்கியுள்ள நிலையில், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மாபெரும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் 15, நார்ட் 5, ஒன்பிளஸ் 13ஆர், ஒன்பிளஸ் 13, நோர்ட் சிஇ 5, 13எஸ், நார்ட் சிஇ 4 மற்றும் சிஇ 4 லைட் 5ஜி போன்ற பிரபல மாடல்கள் அனைத்தும் சிறப்பு விலையில் உள்ளன. பட்டியலிடப்பட்டுள்ளன. அமேசான் தள்ளுபடிகளைத் தவிர, வங்கி அட்டைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.
ஒன்பிளஸ் 15 - புதிய விலை
முதலில் ரூ.72,999க்கு விற்பனையாகிய ஒன்பிளஸ் 15 ஃபிளாக்ஷிப் மாடல், தற்போது ரூ.69,499க்கு கிடைக்கிறது. 7300mAh பெரிய பேட்டரி, Snapdragon 8 Elite Gen 5 சிப், 6.78 இன்ச் BOE AMOLED டிஸ்ப்ளே, 165Hz ரெஃப்ரெஷ் ரேட், 50MP டிரிபிள் ரியர் உள்ளிட்ட கேமரா அம்சங்கள் உள்ளன. மேலும், நார்ட் 5 மாடல் ரூ.34,999 இலிருந்து ரூ.30,249 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 13R – விலை குறைப்பு
முதலில் ரூ.44,999 விலையில் இருந்த ஒன்பிளஸ் 13ஆர், பிளாக் ஃபிரைடே விற்பனையில் ரூ.37,999க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாடலில் உயர்தர செயல்திறன், வலுவான பேட்டரி மற்றும் மேம்பட்ட கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளதால், நடுத்தர பட்ஜெட்டில் பிரீமியம் அனுபவம் விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வு.
ஒன்பிளஸ் 13 – ஃபிளாக்ஷிப் மாடலில் பெரிய தள்ளுபடி
ரூ.72,999 விலையில் இருந்த ஒன்பிளஸ் 13 தற்போது ரூ.61,999க்கு கிடைக்கிறது. நார்ட் சிஇ 5 ரூ.24,999 இலிருந்து ரூ.23,249 ஆகவும், நார்ட் சிஇ 4 ரூ.24,999 இலிருந்து ரூ.18,999 ஆகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
நார்ட் CE 4 லைட் 5G – பட்ஜெட் மாடலுக்கு சிறப்பு சலுகை
பழைய விலை ரூ.20,000 இருந்து நார்ட் CE 4 லைட் 5G, இப்போது வெறும் ரூ.15,999க்கு கிடைக்கிறது. 13S மாதலும் அதிக தள்ளுபடியில் ரூ.49,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
வங்கி சலுகைகள் & எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள்
Axis Bank, HDFC Bank, Bank of Baroda போன்ற வங்கிகளின் கார்டுகள் மூலம் வாங்கினால் கூடுதல் 10% வரை தள்ளுபடி கிடைக்கும். Amazon Pay சலுகைகள், ICICI Amazon Pay கார்டு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் கிடைக்கின்றன. பழைய போனை மாற்றினால் தள்ளுபடி அதிகரிக்கும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.