
ஸ்மார்ட்போன் பயனர்களின் மிகப்பெரிய கவலையே 'சார்ஜ் நிற்பதில்லை' என்பதுதான். காலையில் சார்ஜ் போட்டால் மதியமே தீர்ந்துவிடுகிறது என்று புலம்புபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சுமந்து வருகிறது ஒன்பிளஸ் (OnePlus). அந்நிறுவனம் தயாரித்து வரும் புதிய 'OnePlus Ace 6 Turbo' ஸ்மார்ட்போன், கற்பனைக்கும் எட்டாத அளவு பெரிய பேட்டரியுடன் வரவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
சந்தையில் தற்போது வரும் பெரும்பாலான போன்களில் 5000mAh பேட்டரிதான் வழக்கமாக உள்ளது. சில கேமிங் போன்களில் 6000mAh வரை பார்த்திருப்போம். ஆனால், ஒன்பிளஸ் நிறுவனம் அனைவரையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் 9,000mAh பேட்டரியை இந்த Ace 6 Turbo மாடலில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், ஒருமுறை சார்ஜ் செய்தால் குறைந்தது இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை கவலையின்றி போனைப் பயன்படுத்தலாம். கேமிங் பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
பேட்டரி பெரிதாக இருந்தால் போன் ஸ்லோவாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இதில் குவால்காம் நிறுவனத்தின் அதிவேக Snapdragon 8s Gen 4 சிப்செட் பொருத்தப்பட உள்ளது. இது ஒரு ஆக்டா-கோர் ப்ராசஸர் என்பதால், மல்டி டாஸ்கிங் மற்றும் ஹெவி கேமிங்கிற்கு (Heavy Gaming) ஏற்றதாக இருக்கும்.
டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வெளியிட்டுள்ள லீக்ஸ் தகவலின்படி, இந்த போனில்:
6.78-இன்ச் LTPS OLED டிஸ்பிளே இருக்கும்.
இது 1.5K ரெசல்யூஷன் கொண்டது.
கேமர்களுக்கு ஏற்றவாறு 144Hz அல்லது 165Hz ரிப்ரெஷ் ரேட் (Refresh Rate) இதில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போன் முதலில் சீனாவில் 'OnePlus Ace 6 Turbo' என்ற பெயரில் 2026-ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இது 'OnePlus Nord 6' (ஒன்பிளஸ் நார்டு 6) என்ற பெயரில் ரீ-பிராண்ட் செய்யப்பட்டு, 2026-ம் ஆண்டின் மத்தியில் (ஏப்ரல் - ஜூன்) விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.
தற்போதுள்ள OnePlus Nord 5 போனின் டிசைனைத் தழுவியே இந்த புதிய மாடலும் இருக்கும் என்றும், ஆனால் உள்ளே இருக்கும் 'சரக்கு' (Specs) வேற லெவலில் இருக்கும் என்றும் டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரெட்மி டர்போ 5 மற்றும் ரியல்மி நியோ 8 SE போன்ற போன்களுக்கு இது கடும் போட்டியாக அமையும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.