அசத்தல் அம்சங்களுடன் சூப்பர்போன் உருவாக்கும் ஒன்பிளஸ்

By Kevin Kaarki  |  First Published Jan 26, 2022, 12:35 PM IST

ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக சூப்பர்போன் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா சூப்பர்போன் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூப்பர்போன் மாடலில் வழக்கமான ப்ரோ வேரியண்டில் வழங்கப்படுவதை விட மேம்பட்ட கேமராக்கள், அதிவேக பிராசஸர், சிறப்பான ஹார்டுவேர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

புது அல்ட்ரா ஸ்மார்ட்போன்  பற்றி ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இந்த மாடல் 2022 ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ நிறுவனங்களின் அதிவீன தொழில்நுட்பங்கள் அல்ட்ரா ஃபிளாக்‌ஷிப் மாடலை உருவாக்கும் என தெரிகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலும் ஃபிளாக்‌ஷிப் மாடல் தான் என்ற போதிலும், இதில் சியோமி 11 அல்ட்ரா மாடலில் உள்ளதை போன்ற அம்சங்கள் இல்லை.

Tap to resize

Latest Videos

undefined

கடந்த ஆண்டு ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்கள் தங்களின் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள கூட்டணி அமைத்தன. இதன் மூலம் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்5 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. இந்த மாடலில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஹேசில்பிலாடு தொழில்நுட்பம் வழங்கப்பட்டது. இரு நிறுவனங்கள் கூட்டணியை பயன்படுத்தி ஒன்பிளஸ் நிறுவனம் ஒப்போ உருவாக்கி இருக்கும் மரிசிலிகான் என்.பி.யு. சிப்செட்டை பயன்படுத்தும் என தெரிகிறது. இந்த சிப்செட் புகைப்படம் மற்றும் வீடியோக்களின் தரத்தை மேம்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

தற்போது ஒன்பிளஸ் 10 அல்ட்ரா மாடல் ஆல்ஃபா  டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா பற்றிய விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம். 

click me!