180 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - வெளியீட்டு தேதி அறிவிப்பு

By Kevin Kaarki  |  First Published Mar 12, 2022, 3:56 PM IST

ஒகினவா நிறுவனம் இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 


குருகிராமை சேர்ந்த ஒகினவா நிறுவனம் இந்தியாவில் தனது புது எலெக்ட்ரிக்  ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டரின் பெயர்  இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒகி90 பெயரில் அறிமுகமாகும் என எதிர்பாகர்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் விற்பனை மார்ச் 24 ஆம் தேதி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய சந்தையில் புதிய ஒகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் விலை ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. புதிய ஒகினவா ஒகி90 மாடல் ஓலா எஸ்1, சிம்பில் ஒன், பஜாஜ் செட்டாக் மற்றும் டி.வி.எஸ். ஐ கியூப் போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tap to resize

Latest Videos

சமீபத்தில் இந்த ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகின. ஸ்பை படங்களின் படி புதிய ஒகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 14 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் நீண்ட எக்ஸ்டெண்ட் சீட்கள், பெரிய அலாய் வீல்கள், சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்ட ரியர் கிராப் ரெயில், டூயல் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.

ஒகினவா ஒகி90 மாடலின் மத்தியில் மோட்டார் பொருத்தப்படுகிறது. இந்த மோட்டாருடன் எளிதில் மாற்றிக் கொள்ளக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம். இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் முழு சார்ஜ் செய்தால் 150 முதல் 180 கிலோமீட்டர் வரை செல்லும் ரேன்ஜ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இவைதவிர  புதிய ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏராளமான கனெக்டெட் அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. வரும் நாட்களில் ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

click me!