ஜியோவின் தொடர் சலுகையால், ஆடிப் போன மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஜியோ உடனான போட்டியை சமாளிக்க, ஜியோவை போலவே சலுகையை வாரி வழங்க தொடங்கியுள்ளது .
இதன் தொடர்ச்சியாக, ஏர்டெல் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாகவே பல சலுகையை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு , ஏர்டெல் அறிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புது சலுகையை அறிவித்திருக்கு ஏர்டெல்
எப்பொழுது வெளியாகும் ஏர்டெல்லின் சலுகைகள் ...?
ஏர்டெல்லின் சலுகைகள் குறித்து பெரிய எதிர்பார்ப்பு வரும் 13 ஆம் தேதி முதல் வழங்க உள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது .
எப்படி பயன்படுத்துவது ?
போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் மை ஏர்டெல் செயலி My Airtel, மூலமாக தங்களுக்கு உண்டான சலுகையை தெரிந்துக் கொண்டு அதன் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் , இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 100 ஜிபி வரை டேட்டாவினை பெற முடியும் என கூறப்படுகிறது .
அதாவது ஒரு குறுஞ்செய்தி மூலம்,போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கப்படும் என்ற செய்தியையும், சலுகை குறித்த விவரத்தை மார்ச் 13 ஆம் தேதிதான் அறிவிக்கப்படும் எனவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.