Oben Rorr Electric : 200 கி.மீ. ரேன்ஜ், ஸ்டைலிஷ் லுக் - மாஸ் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

By Kevin Kaarki  |  First Published Mar 16, 2022, 9:47 AM IST

முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 200 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்ட ஒபன் ரோர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. 


எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமான ஒபன் ரோர் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. ஒபன் ரோர் என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 99,999, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு முன்பதிவு கட்டணம் ரூ. 999 ஆகும். 

பெங்களூரை சேர்ந்த ஸ்மாட்ர்ட் அப் நிறுவனமான ஒபன் EV தனது ஒபன் ரோர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக ஒபன் ரோர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்தியாவின் ஏவு மாநிலங்களில் விற்பனைக்கு கிடைக்கும். ஒபன் ரோர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கான டெஸ்ட் ரைடுகள் மே மாத வாக்கில் துவங்க இருக்கின்றன. வினியோகம் இந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்க இருக்கிறது.

Tap to resize

Latest Videos

இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அசத்தலான டிசைன் கொண்டிருக்கிறது. இது அதநவீன எலிமெண்ட்கள் மற்றும் அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் வட்ட வடிவிலான ஆல்-எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டே டைம் ரன்னிங் லைட்கள், எல்.இ.டி. இண்டிகேட்டர்கள், எல்.இ.டி. டெயில் லைட்களை கொண்டிருக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிள் ட்ரிபில் டோன் நிறங்களை கொண்டிருக்கிறது.

ஒபன் ரோர் மோட்டார்சைக்கிள் முற்றிலும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும், இது சிறப்பான ஏரோடைனமிக் அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் ஏராளமான கனெக்டெட் தொழில்நுட்பங்களுடன் ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பிளாக் அலாய் வீல்கள், முன்புறம் மற்றும் பின்புறம் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 

புதிய ஒபன் ரோர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் 4.4 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் மற்றும் 10 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பவர்டிரெயின் 62 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3 நொடிகளில் எட்டிவிடும். 

மேவலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ஒபன் ரோர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில்: இகோ, சிட்டி மற்றும் ஹவோக் என மூன்று விதமான ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரங்கள் ஆகும். 

புதிய ஒபன் ரோர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தவிர ஒபன் EV ஸ்டார்ட் அப் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதிய வாகனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.  

click me!