நீண்ட பேட்டரி பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளுடன் ரூ. 1299 விலை ட்ரூ வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்

By Kevin Kaarki  |  First Published Mar 15, 2022, 5:12 PM IST

லாவா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


இந்தியாவை சேர்ந்த மொபைல் போன் உற்பத்தியாளரான லாவா புதிய ப்ரோபட்ஸ் 21 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் இந்த இயர்பட்ஸ் ஒன்பது மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இந்த பிரிவில் இத்தனை பேக்கப் வழங்கும் ஒரே இயர்போனாக இது இருக்கிறது. இதில் உள்ள இயர்பட்களில் 60mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் இயர்பட்கள் டிரெண்டியான ஸ்டெம் டிசைன கொண்டிருக்கிறது. இந்த இயர்போனை வாங்கும் போது மூன்று மாதங்களுக்கான இலவச கானா பிளஸ் சந்தா வழங்கப்படுகிறது. ப்ரோபட்ஸ் 21 மாடல் மிக நுனுக்கமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது பயனர்கள் தனித்துவம் மிக்க மியூசிக்கை அனுபவிக்க வழி செய்கிறது. புதிய ப்ரோபட்ஸ் 21 மாடலில் குயிக் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்த தொழில்நுட்பம் 20 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 200 நிமிடங்களுக்கான பிளேபேக் வழங்குகிறது. இந்த பட்ஸ் ப்ளூடூத் 5.1, வேக் அண்ட் பேர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது சீரான கனெக்டிவிட்டியை வழங்குகிறது. இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சிறப்பான வயர்லெஸ் செயல்திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது டச் ஸ்கிரீன் கண்ட்ரோல் வசதி கொண்டு இருக்கிறது.

இதை கொண்டு அதிவேகமான கூகுள் மற்றும் சிரி அசிஸ்டண்ட் சேவையை இயக்க முடியும். இந்த இயர்பட்ஸ் 500mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் இயர்பட்களை ஐந்து முறை சார்ஜ் செய்து கொள்ளலாம். இது 45 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது. இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 12mm டைனமிக் டிரைவர்கள் உள்ளன.

லாவா ப்ரோபட்ஸ் 21 அம்சங்கள்:

- ப்ளூடூத் 5.1
- 12mm டைனமிக் டிரைவர்கள்
- 9H புல் பேட்டரி பட்ஸ்
- 45H பிளேபேக் டைம்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IPX4)
- குயிக் சார்ஜ்
- சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ஸ் வசதி

லாவா ப்ரோபட்ஸ் 21 இயர்போன் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1499 ஆகும். எனினும், இந்த இயர்பட்ஸ் அறிமுக சலுகையாக ரூ. 1299 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. லாவா ப்ரோபட்ஸ் 21 அமேசான் மற்றும் லாவா வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அறிமுக சலுகை மார்ச் 24 ஆம் தேதி நடைபெறும் முதல் விற்பனையின் போது மட்டும் பொருந்தும்.

click me!