
உலகப்புகழ்பெற்ற செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம், எச்.எம்.டி. குலோபல் நிறுவனத்துடன் இணைந்து புதிய ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போனை சீனாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.
பின்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த உலகின் புகழ் பெற்ற நோக்கியா நிறுவனம் 2ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டுக்கு விற்கப்பட்டது.
ஆனால் திடீரென கடந்த ஆண்டு மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தையில் நுழையப் போவதாக அறிவித்தது நோக்கியா. பின்லாந்தின் எச்.எம்.டி குலோபல் நிறுவனம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நோக்கியா ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமத்தை பெற்றது. 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் ஆன்ட்ராய்ட் தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், நோக்கியா நிறுவனம் தனது புதிய ஆன்ட்ராய்ட் ‘நவ்கட் வெர்சனில்’ இயங்கும் ஸ்மார்ட் போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. ‘1699 சி.என்.ஒய்’ என்ற மாடலில் நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை 246 அமெரிக்க டாலர். இந்தியமதிப்பில் ரூ.16,739 ஆகும்.
என்னென்ன வசதிகள் உள்ளன?
கருப்பு வண்ணத்தில், முழுவதுமாக உலோகத்தில் ஆன பிரேம்களில் ஸ்மார்ட் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5.5 இஞ்ச் ஃபுல் HD டிஸ்ப்ளே, 2.5டி கர்வ்டு கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, பிங்கர் பிரின்ட் ஸ்கேனர், ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன், வால்யூம் பட்டன், இடதுபக்கத்தில் சிம்கார்ட் சிலாட் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்நாப்டிராகன் 430 பிராசசர், 4 ஜி.பி. ரோம், 64 ஜி.பி. இன்டர்னல் மெமரி, 128 ஜி.பி. வரை மெமரி ஸ்லாட் சேர்க்கும் வசதி, இரட்டை ஆம்ப்ளி பையருடன் கொண்ட ஸ்பீக்கர், ஆட்டோ போகஸ், 16 மெகாபிக்சல் கொண்ட பின்பக்க கேமிரா, 8 மெகாபிக்சல் கொண்ட முன்பக்க கேமிரா, இரட்டை பிளாஷ், 3 ஆயிரம் எம்.ஏ.எச் பேட்டரி ஆகியவை உள்ளன.
மேலும், நோக்கியா ஆன்ட்ராய்ட் நவ்கட் தொழில்நுட்பத்தில் 4ஜி எல்டியுடன் இயங்குகிறது.
இந்தியாவில் வரும் மார்ச் மாதத்துக்கு பின்பு தான் நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகும் எனத் தெரிகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.